பக்கம்:சிதறல்கள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

என்னைப்போலவே எல்லோரும் இருக்கிறர்கள் என்று கூற முடியாது. என்னோடு படிக்கும் மற்றொரு பெண் "கலைஞர்' என்றால் உயிர்விட்டுவிடுவாள். அவர் ஒருநாள் கல்லூரியில் பேசினார். கூட்டம் சொல்லிமுடியாது; என் வகுப்பு மாணவி நெருக்கி அடித்துக் கொண்டு உள்ளே போனாள். என்னையும் கூப்பிட்டாள். நானும் போய்க் கேட்டேன். நான் எந்த அரசியல் தலைவருக்கும் மதிப்புத் தருகிறேன், ஆனால் எனக்கு என்று ஒரு கட்சிக் கோட்பாடு இருக்கிறது. அது இன்னது என்று வெளிப்படையாகக் கூறமுடிவதில்லை. இன்னும் நான் நினைக்கும் லட்சியங்களோடு கூடிய கட்சி உருவாகவில்லை. அதுவரை எங்கே நன்மை இருக்கிறதோ அதைப் பாராட்டி ஆதரவு கொடுப்பதுதான் நல்லது என்ற கொள்கை என்னிடம் இருக்கிறது. நல்லவர்கள் வாழ வேண்டும்: நல்ல கொள்கைகள் உருவாக வேண்டும் என்று நினைப்பது உண்டு. எப்படியோ என் பாதை சோஷியலிசம் என்பதைத் தெளிவாக வகுத்துக் கொண்டேன்.

மற்றவர்கள் தனிப்பட்ட மனிதர்களைத் தாக்கிக் கொண்டு இருக்கிறார்கள். அல்லது புகழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். சில சமயம் சாதி மொழி என்ற அளவுக்கு அரசியல் தாழ்ந்து போய்விடுகிறது. அந்த அரசியல்தான் நாட்டில் தலையோங்கி இருக்கிறது. ஆனால் அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. நான் ஒதுங்கி விடுவதால் அது இந்த நாட்டிலிருந்து ஒதுங்கிவிட்டது என்று கூற முடியுமா?

நான் என்ன அப்பொழுது கல்லூரி மாணவிதானே எட்டி இருந்து பார்க்க முடியுமே தவிர அதில் நேரிடையாக எப்படிக் கலந்துகொள்ள முடியும். நான் சுழற்கோப்பைப் பேச்சுக்காக அரசியல் செய்திகளை அறிவேன். விமரிசிப்பே கைதட்டல்களைப் பெறுவேன்.

ஒரு சமயம் நாடகமும் நடித்திருக்கிறேன். அதில் நான் குறிப்பிட்டேன். அந்த முதல் டிக்கெட்டு ஹீரோவாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/37&oldid=1280027" இலிருந்து மீள்விக்கப்பட்டது