பக்கம்:சிதறல்கள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

அவர் எப்பொழுதும் சமுதாயத்தைப் பற்றியே எண்ணிக் கொண்டு இருந்தார். அவர் எழுதிய கவிதை ஒன்று அதி அற்புதமானது.

'அவன் ஒரு தொழு நோயாளி
அவன் கடவுளைத் தொழுதான்
அவன் ஒரு தொழு நோயாளி'

அவர் நினைத்துப் பார்க்கவே இல்லை. அதற்கு இப்படி ஒரு பொருள் இருக்கும் என்று. கடவுளைத் தொழுபவன் ஒரு நோயாளி; அவன் நோய் தொழுதல் என்ற கருத்துப் பட அந்தக் கவிதையை அமைத்து விட்டார்.

கடவுளைத் தொழுவது மட்டும் நோயல்ல. மனிதர்களைத் தொழுது பிழைப்பதே ஒரு நோய் என்று அதற்கு விளக்கம் தந்தார்.

இந்த நாட்டிலே சமுதாயச் சிந்தனையே குறைந்து விட்டது என்று அவர் அடிக்கடி கூறுவார். இந்த நாட்டில் மிகப் பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் (அப்படி யாரும் இல்லை. அப்படிச் சொல்லிக் கொள்கிறவர்கள் தாம் மிகுதி என்பது அவரது கருத்து) தனி மனிதர் தன்மையையே எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அது மாறவே எழுத்தாளனுக்கு ஒரு மகத்தான தொண்டு காத்துக் கிடக்கிறது என்று கூறுவார்.

அதாவது இந்த நாட்டுக்கு அரசியல் சமூகப் பிரச்சனைகளை சோஷயலிச கண்ணோட்டத்தோடு பார்க்கும் எழுத்தாளர்கள் தேவை என்பது அவர் மதிப்பீடு அந்தப் பார்வையைப் புகுத்தினால்தான் மனிதர்கள் தாம் செல்லும் பாதை இன்னது என்பதை உணர்வார்கள்.

பத்திரிகைகள் இந்த நாட்டில் ஒரு வியாபார நிறுவனம் என்று கூறுகிறார். சில அரசியல்வாதிகள் அவற்றிற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/53&oldid=1285027" இலிருந்து மீள்விக்கப்பட்டது