பக்கம்:சிதறல்கள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

67

எனக்கே அழகில் தனி மயக்கம் இருந்தது. அந்தக் கவிதைப் பயித்தியத்துக்கு அதுதான் ஆசிரியருக்கு மணம் நடந்தது. அந்த மணப்பெண் மிக அழகாக இருந்தாள். எனக்குள்ளாகவே இந்த ஆசிரியர்களின் துணைவியர்களைச் சந்திக்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது உண்டு. ஏதாவது சாக்குக் கிடைத்தால் போய்விடுவேன். அவர்கள் பெரும்பாலும் நல்லவர்களாகத் தான் இருந்தார்கள். அவர்களை நான் ரசிக்கவில்லை; அவர்கள என்னை ரசித்தார்கள். யார் இந்த பெண்?" என்ற கேள்வியைக் கேட்பார்கள். பலரோடு நானும் ஒருத்தியாக இருந்தேன். என்றாலும் என்னைப் பற்றி இந்தக் கேள்வியைக் கேட்கும் போது என் தலை கொஞ்சம் சுற்றும்.

"இவள் எங்கள் கல்லூரியில் படிக்கிறாள்"

"ரொம்ப சுருசுருப்பு"

"கவிதை எழுதுவாள்"

"அடிக்கடி வானெலியிலிருந்து"

"அழைப்பு வரும்"

"தொலைக்காட்சியில் கூப்பிடுவார்கள்"

"சுழற்கோப்பைப் பேச்சாளி"

என்று இப்படிப் பலவிதமாக என்னைச் சித்திரிப்பார்கள்.

அவர்கள் என்னைப் பற்றி ஒரே ஒரு சொல்லால் முடிவு செய்வார்கள்.

"இவள் ஒரு வாயாடி" என்பது அவர்கள் என்னைப்பற்றிக் கொண்ட முடிவு.

"அந்த வாயாடிப் பெண்" என்றே என்னைச் சுட்டி வந்தார்கள். அது அப்பொழுது தெரியாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/68&oldid=1288615" இலிருந்து மீள்விக்கப்பட்டது