பக்கம்:சிதறல்கள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

இப்பொழுது ஒரு முறை அந்தக் கவிதைப் பயித்தியம் வீட்டிற்குச் சென்றபோது அவர் சொன்னார்.

"உன்னைப் பற்றி என் மனைவி அப்படி நினைக்கிறாள்" என்று.

இதைப் பாராட்டு என்று எடுத்துக் கொள்வதா, நகை மொழி என்று எடுத்துக் கொள்வதா என்று தெரிய வில்லை.

நான் எப்பொழுதும் கலகலப்பாகப் பேசுவேன். பேசாமல் எப்படி இருக்க முடியும். பேசினால் தானே மற்றவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள முடிகிறது.

கவிதைப் பயித்தியம். அவர் மனைவி ஒரு நகைப் பயித்தியமாகவே இருந்தாள். தன் தாய் வீட்டில் செய்து போட்ட நகைகளைப் பற்றிப் பிரமாதமாகப் பேசுவாள். அவள் ஏணிப்படிகள் சவரன்களை அடுக்கிப் பார்ப்பதில் இருந்தது. கலியாணம் செய்துகொள்கிற ஒவ்வொரு பெண்ணும் தாய் வீட்டுப் பெருமையைச் சொல்வதில் சளைட்பது இல்லை என்பதைத் தெரிந்து கொண்டேன்.

அவர் எங்காவது கவியரங்குகளுக்குச் சென்று விடுவார். அதற்கு அவருக்குப் பணம் கிடைக்கிறது என்று தெரிந்து கொள்ள முடிந்தது. சிலருக்கு இதுவே பிழைப்பாகவும் ஆகிவிடுகிறது. கூட்டங்களுக்குச் சென்று பேசுவது ஒரு தொழிலாகவே ஆகிவிட்டது. அதில் இவரும் விதிவிலக்கல்ல. அந்த அம்மாவோடு பேசுவதற்கு விஷயம் கிடைப்பது இல்லை.

அவர்களுக்காகவே நான் பெட்டியில் வைத்திருந்த நகைகளை மாட்டிக் கொண்டு போவேன். அப்பொழுது தானே பேசுவதற்கு விஷயம் கிடைக்கும்! என்னோடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/69&oldid=1288618" இலிருந்து மீள்விக்கப்பட்டது