பக்கம்:சிதறல்கள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 என்பதை. என்னைக் கணவனைப்போல அவர்கள் காத்து வந்தனர். இந்த சினிமா நண்பன் ஒரு வாழ்க்கைப் பிரச்சனையாக வந்து அமைவான் என்று எதிர்பார்க்கவில்லை. அவனைப் போ என்றும் சொல்ல முடியவில்லை. வா' என்றும் வரவேற்க முடியவில்லை. அவன் என்னைப் பார்க்கத் துடித்தான்; வந்தால் ஒன்றும் பேச மாட்டான். சும்மா நான் பேசுவதைக் கேட்பான். அவ்வளவுதான். அவன் பசி ஆறிவிடும். "என்னுடி! அவனுக்கு உன்னேடு பேச்சு?" என்று அம்மா அடிக்கடி கண்டித்து வந்தாள். "அவளுேடு படங்களைப் பற்றி விமரிசிப்பேன்’ என்றேன். "இந்த விட்டில் உன்னேடு பேசில்ை, நீ அவரைப் பற்றித்தான் பேசுவாய்; வேறு என்ன பேசத்தெரியும்” என்று கேட்பேன். "திரும்பத் திரும்ப சுட்ட இட்டிலியைத் தான் சுட முடியும். வேறு என்ன இந்த வீட்டில் படைக்க முடியும்" என்று கேட்பேன். இந்தத் தாடி எங்கள் வீட்டில் ஒரு புதுப் பிரச்சனையாக அமைந்து விட்டான். என் காதலன் அவன் என்பது உறுதிப்பட்டு விட்டது. சுற்றுப்புறம் அவ்வாறு பேசிப்பேசி அவனை எனக்குக் காதலன் என்ற பட்டத்தைச்சூட்டி விட்டார்கள். நான் அதிலிருந்து தப்ப முடியாமல் போய்விட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/93&oldid=825628" இலிருந்து மீள்விக்கப்பட்டது