பக்கம்:சிதறல்கள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93 1 O என் வாழ்க்கையில் ஒரு அத்தியாயம் புதிதாகப் பிறந்தது. அதாவது சுற்றுப்புறம் நம்பத்தொடங்கியது. நான் உண்மையில் காதலிக்கிறேன் என்று. என் அம்மா நம்பினுள்; என் பாட்டி நம்பினுள்; உலக வாழ்க்கை இன்னது என்று தெரியாமல் வெறும் ஊமைக் கனவுகளைக் கண்டு கொண்டிருந்த என் தங்கையும் நினைத்தாள்; அதற்கப்புறம் நானும் நினைத்தேன் அவன் என் காதலன் என்பதை, நான் அவன் காதலியாக அவன் நினைத்தான். அதற்கு என் நெஞ்சு இடம் கொடுக்கவில்லை. அவன் என் காதலன் ஆகிருன், இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. அவன் என்னைக் காதலிக்கிருன்; அதனுல் நான் அவன் காதலி. நான் அவனைக் காதலிக்கவில்லை; அதனுல் அவன் என் காதலன் அல்ல. அதாவது ஒருதலைக் காதல்' என்று நான் படித்த அந்தப் பழைய இலக்கியம் இதற்கு விளக்கம் தரும். எனக்கு என் மகன் உறவு இருந்தால் போதும் என்று நினைத்து வாழ்ந்தேன். அவன் என்னை விரும்பினுன் நான் அவனை விரும்பினேன். இந்தச் சின்ன உலகம் அழகாக இருந்தது; அமைதியாக இருந்தது. ஆல்ை மற்றவர்கள் இந்தப் பழியைச் சுமத்திய உடன் அந்தச் சுமையைத் தாங்குவதில் நான் மகிழ்ச்சி அடைந்தேன். அந்த உணர் வோடு நான் வாழ்வது நியாயம்தான் என்று பட்டது வேண்டுமென்றே. அவனிடம் நீண்ட நேரம் பேசுவேன்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/94&oldid=825630" இலிருந்து மீள்விக்கப்பட்டது