பக்கம்:சித்தி வேழம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மடல் தொடங்கிளுள் 97 "இவளா மடலேறப் போகிருள்? இவள் எவ்வளவு மென்மை உடையவள்!" "துடிபோன்ற இடையையுடைய என் மகள்தான் மடல் தொடங்கிள்ை.” தாயின் கூற்றைப் பின் வரும் பாடல் தெரிவிக் கிறது. வகைமிகும் அசுரர் மாளவந்து உழிஞை வாள் அமர் விளைத்ததா ளாளன், புகைமிகும் அனலில் புரம்பொடி படுத்த பொன்மலை வில்லிதன் புதல்வன், திகைமிகு கீர்த்தித் திருவிடைக் கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்ற தொகைமிகு நாமத் தவன்திரு வடிக்கென் துடிஇடை மடல் தொடங் கினளே. (இனங்கள் மிக்க அசுரர்கள் மாளுவதற்காகத் திருவவதாரம் செய்து பகைவர் மதிலேக் கோடலாகிய உழிஞைத்தினேப் போரை வாளால் விளேத்த முயற்சியை யுடையவன், புகை மிக்க நெருப்பில் மூன்று புரங்களேப் பொடியாக்கிய மேரு மலையை வில்லாகவுடைய சிவபெருமானுக்குப் புதல்வன், திசைகளில் மிக்குப் பரவிய புகழை யுடைய திருவிடைக்கழி யென்னும் தலத்தில் அழகிய குரா மரத்தின் நிழலில் கின்றருளும், எண்ணிக்கையில் மிக்க பல திருநாமங்களே யுடையவனகிய முருகனது திருவடியின்பொருட்டு, துடி போன்ற இடையையுடைய என் மகள் மடலூர்தலத் தொடங்கினுள். வகை இனம், பிரிவு, வந்து அவதரித்து. மதிலே முற்றுகையிடு வது உழிஞைத்திணையின்பாற் படும்; அப்போது உழிஞை மாலையை வீரர் அணிவர். உழிஞை அமர், வாள் அமர் என்று தனித்தனியே கூட்டுக. தாளாளன் - பெரு முயற்சியுடையவன். பொன் மலே - மேரு. திரிபுர சங்காரத்தின்போது இறைவன் மேருவையே வில் லாக வளைத்துச் சென்ருன் என்பது புராண வரலாறு. திகை . சித்தி-7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/103&oldid=825701" இலிருந்து மீள்விக்கப்பட்டது