பக்கம்:சித்தி வேழம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறமகள் இறைவன் 101 யாளங்தானே மாலே? அந்த அடையாளம் எதுவாக இருந் தாலும், முதலில் அவன் இவளே ஏற்றுக்கொள்ளத் திரு வுள்ளம் கொள்ளவேண்டுமே! தன்னையே கொடுப்பதற்கு அறிகுறிதானே தாரைக் கொடுத்தல்? W. தாய்: அதுவும் உண்மைதான். தோழி : அவன். ஏற்றுக்கொள்வதற்குரிய தகுதி இவ ளுக்கு இருந்தால்தானே மாலேயோ மலரோ இதழோ கிடைக் கும்? அவன் இருக்கும் இடம் வைதிகர் வாழும் இடம் என்பது உனக்குத் தெரியும். அவன் சிங்க ஏற்றைப் போன்றவன் என்பதையும் நீ அறிவாய். பேரறிவாளன் என்பதை உல கமே அறியும். அப்படி இருக்க, இந்தப் பேதைப் பெண்ணின் காதலே ஏற்று அவன் மாலேயை அனுப்பவில்லை என்று அங்கலாய்க்கிருயே! இந்தச் சிறு பெண்தான் ஏதோ மயக் கத்தால் சொல்கிருள் என்ருல், அதுபவசாலியாகிய நீயும் இப்படிப் பேசுகிருயே! - தாய் : நான் விண் ஆசைப்ப்டவில்லை; அதற்கும் கியா யம் இருக்கிறது. என் மகள் அவனே மணக்கும் தகுதி உடை யவள் அல்லள் என்பதை அறிவேன். ஆனால் அவன் தன்னி னும் தாழ்ந்த கிலேயுள்ளவர்களுக்கும் அருள்புரிபவன். தோழி: அருள்புரிவது வேறு மணம்புரிவது வேறு. தாய் : மணம்புரிவதையே சொல்கிறேன். வைதிகர் வாழ் இடைக்கழியில் இருப்பவனுலுைம் வேடர்கள் வாழும் மலேக்குச் சென்று திருமணம் செய்துகொண்டான். - தோழி: அவன் தேவேந்திரனுடைய மகளே மணந்த வன் அல்லவா? - தாய் ஆம்; அவளோடு குறத்தியாகிய வள்ளியையும் திருமணம் செய்துகொண்டான். தேவயானைக்கு எத்தனை உரிமையும் இடமும் உண்டோ அதே உரிமையும் இடமும் பெறும்படியாகக் குறத்தியை மணந்தவன். தேவயான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/107&oldid=825705" இலிருந்து மீள்விக்கப்பட்டது