பக்கம்:சித்தி வேழம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

LILLIGJI ஏதேனும் ஒரு நூல் எழுதினால் அதற்குப் பயன் இன்ன தென்று சொல்வது ஒரு வழக்கு தேவாரத்தில் திருஞான சம்பந்தப் பெருமான் ஒவ்வொரு திருப்பதிகத்திலும் கடைசிப் பாசுரத்தில் பயனச் சொல்லியிருக்கிருர். அந்தப் பாடலேத் திருக்கடைக்காப்பு என்று சொல்வார்கள்; அதில் பயனேடு சம்பந்தப்பெருமான் தம் திருநாமத்தையும் இணைத்திருப்பார். “ஒரு நெறிய மனம் வைத்துணர் ஞானசம்பந்தன் உரை செய்த, திருநெறிய தமிழ் வல்லவர் தொல்வினை திர்தல் எளிதாமே" என்பது போல வரும். வேறு பலரும் இந்த முறை யில் பாடியிருக்கிருர்கள். சேந்தனர், திருவிசைப்பாவில் திருவிழிமிழலே,திருவாவடு துறை என்னும் இரண்டு தலங்களில் உள்ள சிவபெருமானே யும், திருவிடைக்கழியில் எழுந்தருளியுள்ள முருகனேயும் தனித்தனியே ஒவ்வொரு பதிகத்தில் பாடினர். திருப்பல் லாண்டும் அவர் பாடியிருக்கிருர். இவற்றில் திருவிடைக் கழித் திருவிசைப்பாவிலும் திருப்பல்லாண்டிலும் இறுதிப் பாடலில் தம் பெயரைக் கூறியிருக்கிருர். திருவிடைக்கழிப் பாடலில்மட்டும் பயனச் சொல்லியுள்ளார். அதில் உள்ள பத்துப்பாட்டும் அந்தாதியாக இருப்பதோடு முதல் பாட்டின் முதலும் இறுதிப் பாட்டின் இறுதியும் ஒன்றி மண்டலித் துள்ளன. மாலுலா மனம்" என்று முதற் பாட்டுத் தொடங்குகிறது; இடர்கெடும் மாலுலா மனமே" என்று இறுதிப்பாட்டு முடிகிறது. t திருவிடைக்கழித் திருவிசைப்பா முழுவதும் முருகனே காயகனக வைத்துப் பாடியது; அவன்பால் காதல் கொண்ட தலைவியின் நிலையை அவளுடைய தாய் கூறும் முறையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/115&oldid=825714" இலிருந்து மீள்விக்கப்பட்டது