பக்கம்:சித்தி வேழம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகன் அழகு கண்ணுடைய மக்கள் தரிசனம் செய்து, தம்முடைய உள்ளத்திலே சோதித் திருவுருவை எண்ணி, தியானித்து, மன ஒருமைப்பாடு பெற்றுப் பின்பு அருவத்தோடு கலந்து இன்புற வேண்டுமென்ற கருத்துடன், குணம் குறி இல்லாத இறைவன் உருவம் பெற்று வருகிருன். இந்தத் தத்துவத்தை உருவ வழிபாட்டை ஒப்புக்கொள்கிற சமயத்தினர் எல் லோரும் சொல்கிருர்கள். இறைவனது உருவம் கண்ணே முத லில் கவர்ந்து பின்பு கருத்தையும் கவரவேண்டும். கண்ணேக் கவர்கிற தத்துவந்தான் அழகு என்று பெயர் பெறும். இறைவன் பல்வேறு வகையில் திருவுருவம் கொண்டாலும் அழகுடைய திருவுருவமாக இருந்தால் எத்தகையவரும் அந்த மூர்த்தியினிடத்தில் ஈடுபடுவர். அந்த வகையில் பார்த்தால், இந்த காட்டில் சைவத்திற்கும் வைணவத்திற்கும் அழகுத் திருமேனியுடைய மூர்த்திகளாக இருவர் இருப்பதைக் காண லாம். கங்தனும், கண்ணனும் பேரழகுத் திருக்கோலம் கொண்டு விளங்குகிருர்கள். அன்பு நெறி பற்றும் சைவர் கள் கந்தனையும், வைணவர்கள் கண்ணனேயும் பாராட்டி வழி பட்டு இன்புற்றுத் தம்மை மறந்து கிற்கிருர்கள். முருகப்பெருமானுடைய திருவழகைப் பற்றி அன்பர்கள் பலபடியாகப் பாராட்டியிருக்கிருர்கள். அவன் என்றும் மாருத அழகுடையவன்; என்றும் மாருத இளமை உடை யவன். இளமையும் அழகும் ஒன்றி நின்ருல் அங்கே கவர்ச்சி தானே வந்துவிடுகிறது. முருகன் என்ற சொல் லுக்கே பேரழகு உடையவன் என்று பொருள். முருகு என்பது தெய்வத்தன்மை, பேரழகு, இளமை, மணம் ஆகியவற்றை எல்லாம் குறிக்கும். இந்த நான்கு திறத்திலும் சிறந்து கிற் சி-8 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/119&oldid=825718" இலிருந்து மீள்விக்கப்பட்டது