பக்கம்:சித்தி வேழம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 சித் தி வேழம் பதேைலயே முருகன் என்ற திருநாமம் கந்தபிரானுக்கு வந்தது. t " அரும்பெறல் மரபின் பெரும்பெயர் முருக” என்று அத் திருநாமத்தின் அருமைப்பாட்டை கக்கிரர் திருமுருகாற்றுப்படையில் எடுத்தோதுகிரு.ர். முருகனுடைய பேரெழிலேப்பற்றிச் சொல்லுகின்ற 'பெருமக்களுள் அருணகிரிநாதப் பெருமான் சிறந்தவர் என்று சொல்லவேண்டும். அவர் அவனுடைய அழகை அங்கம் அங்கமாகப் பார்த்துச் சொன்னதோடு, சமுதாய சோபை யையும் சொல்லியிருக்கிரு.ர். "இழுமெ னருவி சொரியு மிமய முதல்வி புதல்வன் வருகவே - இயலு நடையும் வடிவு மழகு மெழுத அரியன் வருகவே ஒழுகு கருணே முழுகு கமல வதனன் வருக வருகவே ஒருவன் இருவ ரொடுகை தொழுத லுபய சரணன் | - - வருகவே விழுது விடுவெ னிலவு பொழியும் நகையன் வருக வருகவே விளரி பயிலு மளியும் Dமிறும் விரவு குரவன் வருகவே மழலே முதிர முதிரு மதுர வசனன் வருக வருகவே வளமை தழுவு பரிதி புரியின் மருவு குமரன் வருகவே' என்ருர் குமரகுருபரர். - - - - - "என்றும் இளேயாய் அழகியாய் ஏறுார்ந்தான் ஏறே உளேயாயென் உள்ளத் துறை" என்பது ஒரு பழைய பாட்டு. - முருகப்பெருமானப் பிள்ளேயாகப் பாடிய பிள்ளைத் தமிழ்க் கவிகளில் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ் என்பது ஒன்று. அதனைப் பாடியவர் குமரகுருபர சுவாமி கள். அவர் அப்பெருமானுடைய பேரெழிலேத் தம்முடைய சொல்லினலே கோலம் செப்கிருர். அவர், -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/120&oldid=825720" இலிருந்து மீள்விக்கப்பட்டது