பக்கம்:சித்தி வேழம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகன் அ முகு 115 "வடிவி னழகு மெழுத வரிய புயமும் நறிய செச்சையும் மருமம் விரவு குரவு மரையின் மணியு மணிகொள் கச்சையும் கடவு மயிலும் அயிலு மொழுகு கருணை வதன பற்பமும் கமல விழியும் விழியும் மனமும் எழுதி யெழுதி நித்தலும் அடிகள் எனவு னடிகள் பணியும் அடிய ரலது மற்றும்வே றமரர் குழுவு மகில மறையும் அரியு மயனு முற்றும் நின் முடியு மடியு முணர வரிய முதல்வ தருக முத்தமே முனிவர் பரவு பரிதி புரியின் முருக தருக முத்தமே என்று பாடியிருக்கிரு.ர். திருச்செங்கோட்டுக்குச் சென்று முருகப்பெருமா னுடைய திருவுருவப் பேரெழிலேக் கண்டு பேரானந்தம் பெற வேண்டும்’ என்ற பசியோடு இருந்தது அருணகிரிநாத ருடைய உள்ளம். செங்குத்தான மலே ஏறி அந்த இளேப்பு நீங்காது முருகப்பெருமானின் சங்கிதானத்தில் கின்றபோது, அவருடைய உள்ளத்தில் இருக்கிற பசியும், அப்பெருமா னின் பேரெழிலின் ஏற்றமும் காரணமாக ஒரே சோதி வடிவ மாய் முருகன் அவருக்குத் தோன்றினன். அந்தத் திருக் கோலத்தைக் கண்டு கண்டு ஆராத இன்பம் மாந்தினர். இந்த இரண்டு கண்களில்ை மாத்திரந்தானே நான் காண் கிறேன்? பல கண்கள் இருந்தால் இன்னும் நன்ருக அது பவிக்கலாமே என்ற ஆர்வம் அவருக்கு எழுந்தது. அதன் பயனக ஒரு பாட்டுப் பாடினர். "மாலோன் மருகனை மன்ருடி மைந்தனை வானவர்க்கு மேலான தேவனே மெய்ஞ்ஞான தெய்வத்தை மேதினியில் சேல் ஆர் வுயல்பொழில் செங்கோ டனைச்சென்று கண்டுதொழ தாலா யிரம்கண் படைத்தில னே அந்த நான்முகனே.” முருகப்பெருமானுடைய பேரழகைப் பற்றி அடியார்கள் பாடியிருக்கிற பாடல்களே எல்லாம் கூட்டிப் பார்ப்பதற்கு இப் போது நேரம் இல்லே. பொதுவாக அவனுடைய பேரழகைக் கண்டு கண்டு மனம்.கிளர்ந்தும் ஈடுபட்டும் உருகியும் இன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/121&oldid=825721" இலிருந்து மீள்விக்கப்பட்டது