பக்கம்:சித்தி வேழம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 சித் தி வேழம் புற்றவர் பலர் என்பதை இப்போது கினேப்பூட்டிக்கொண் டால் போதும். உலகத்தில் உள்ள மக்களிடையே உள்ள உறவை மூன்று வகையாகச் சொல்வார்கள் : நண்பர், பகைவர், அயலார் என்று. ஒருவரிடம் ஒருவர் அன்பு கொள்கின்ற தகைமையை நட்பு என்றும், அதற்கு நேர்மாருன தன்மை யைப் பகை என்றும், நட்பும் பகையும் இல்லாமையை அயல் - நொதுமல் - என்றும் சொல்வார்கள். அமெரிக்க நாட்டில் ஒருவர் இருக்கிருர். அவரைப் பற்றி நமக்குக் கவலே இல்லை. அவர் நமக்கு நொதுமலர். ஏதேனும் ஒரு பொருளின் சிறப்பை நாம் தெரிந்து கொள்ள வேண்டுமானல் அந்தப் பொருளோடு தொடர் புடையவர்களேயோ அபிமானம் உடையவர்களேயோ கேட் டால் அதை மிகைப்படுத்திச் சொல்வர். இறைவனிடத்தில் ஈடுபட்ட பக்தர்கள் தங்கள் தங்கள் வழிபடு கடவுளின் பெரு மையைச் சிறப்பித்துச் சொல்வது இயற்கை. அருணகிரி நாதர் போன்ற பெருமக்கள் முருகனுடைய பேரழகைப் பாராட்டுவது வியப்பன்று. அவர்கள் அந்தப் பெருமா னுடைய அருளறுபவத்தைப் பெற்றவர்கள். அந்தத் திருவுரு வத்தில் ஈடுபாடும் அபிமானமும் உடையவர்கள். அதனல் பேரழகு உடையவன் முருகன் என்ருர்கள் என்று சொல்ல லாம். ஒரு கூடத்தில் பல வகையான ஒவியங்களே மாட்டியிருக் கிருர்கள். சிவபெருமானின் திருக்கோலப் படம், தசாவ தாரப் படங்கள், விநாயகர் திருவுருவப் படம், அம்பிகையின் திருவுருவம் ஆகியவற்றை மாட்டியிருக்கிருர்கள். அந்தக் கூட்டத்தில் இளமையும், அழகும் நிறைந்த முருகப்பெரு மானின் படமும் இருக்கிறது. எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு வரும்போது முருகப்பெருமானுடைய திருவுருவத் தைக் கண்டு அந்த இளமை எழிலில் மனம் பறிகொடுத்து, "இந்த உருவம் அழகாக இருக்கிறதே! இது யாருடையது ?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/122&oldid=825722" இலிருந்து மீள்விக்கப்பட்டது