பக்கம்:சித்தி வேழம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகன் அழகு - 117 என்று அயலார் யாராக இருந்தாலும் கேட்பார்கள். அதற்குக் காரணம் இளமையும், அழகும் உள்ள பொருளிடத் தில் மனித மனம் ஈடுபடும் என்பதுதான். வீதியிலே சின்னக் குழந்தையொன்று நடமாடிக்கொண்டிருந்தால் யாராக இருக் தாலும் அதை எடுத்துக்கொள்வார்கள். இன்னுருடைய குழந்தை என்று தெரியவேண்டிய அவசியம் இல்லே. அது போல் இளமையோடு அழகும் ஒருசேரத் திரண்ட பிழம் பாகிய மூர்த்தி முருகனுடைய படத்தை யார் கண்டாலும் இது அழகியது என்று சொல்லுவார்கள். ஆகவே அன்பர்கள் மட்டுமன்றி நொதுமலர்களாக இருப்பவர்கள் கூட இளமை, அழகு ஆகிய இரண்டும் ஒரு சேரக் காட்சி அளிக்கும் முருகனேப் பேரழகுடையவன் என்று சொல்வார்கள். இந்த இரண்டு பேருடைய கருத்துங்கூட அத்தனே சிறப்பு உடையன என்று சொல்வதற்கில்லே. உண்மை ஒன்று இருக்குமானல் அந்த உண்மையைப் பகைவனும் ஒப்புக்கொள்ளவேண்டும். கதிரவனுடைய வெப்பத்தைத் தாங்கமாட்டாமல் ஒருவன் இருக்கிருன். ஆனாலும் கதிரவன் ஒளி கொடுக்கிருன் என்பதை அவன் மறுக்க முடியாது. அது போல் முருகப்பெருமானுடைய பேரழகைப் பகைவனும் போற்றினன் என்ருல் அந்த அழகு உண்மையானது, உறுதி யானது என்பது புலனுகும். கந்த புராணத்தில் முருகப்பெருமானுடைய பேரழகை அவனுடைய பெரும் பகைவனை சூரபன்மனே போற்று கின்ற வரலாறு வருகிறது. முருகன் சூரபன்மைேடு போராடினன். அப்படிச் சொல்வதைவிட, 'பொல்லாத பிள்ளேயாகிய சூரபன்மனே வசக்கித் தனக்கு அடியனுக்க வேண்டுமென்று போர்க்களத்தில் வந்து கின்ருன் என்று சொல்வது பொருத்தம். சூரனும் முருகனும் செய்த போர் மிகப் பெரிய போர். அந்தப் போரில் சூரபன்மன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/123&oldid=825723" இலிருந்து மீள்விக்கப்பட்டது