பக்கம்:சித்தி வேழம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 சித் தி வேழம் முருகனைத் தன்னை அழிக்க வந்த பகைவகை எண்ணினான். ஆல்ை முருகனே சூரபன்மனைத் தனக்கு அடியாகை ஆக்கிக் கொள்ள வேண்டுமென்று எண்ணினன். சூரபன்மனை அழித்துவிட வேண்டும் என்ற கருத்து முருகப்பெருமானுக்கு இருக்குமானல் போர்க்களத்தை உண்டாக்கி, பல பெரும் படைகளே அணிவகுத்து வரவேண்டும் என்பதில்லே. தன் னுடைய மனத்தில் ஒரு கணம் நினைத்தானுைல் சூரபன்மன் மாத்திரம் அல்ல; அவனது அண்ட கோடி அத்தனையும் படுகுரணமாகிவிடும். ஆனால் முருகப்பெருமானுக்கோ சூரனை அழிக்க வேண்டுமென்பது கருத்தன்று. கையில் கத்தியை வைத்துக்கொண்டு கண்டகண்ட இடங்களிலெல்லாம் குத்திக் காயப்படுத்தும் தன் குழந்தையைத் தாய் கண்டு குத்தமாட் டாள். குழந்தையின் கையில் உள்ள கத்தியை ஏதாவது தந்திரம் செய்து பிடுங்க கினைப்பாள். அதுபோல் சூரபன்ம னுடைய உள்ளத்திலுள்ள அகங்காரத்தையும், அறியாமை யையும் நீக்குவதற்கு என்னவழி என்று இறைவன் எண்ணிப் பார்த்தான். "சூரனுக்கு, அவனுடைய பலவீனத்தைப் புலனுகும்படி செய்தால், ' நம்முடைய பலம் எல்லாம் பலம் அன்று. இறைவனுடைய திருவருள் ஒன்றுதான் உறுதியானது" என்பதை உணர்ந்து, நம் அடியில் வந்து விழுவான்’ என்று எண்ணினன். - - அதனுல்தான் பல காலம் போர் செய்தான். அவ னுடைய படைகளே எல்லாம் அழித்தான். அவனுடைய தம்பிகளும் மக்களும் அழிந்தனர். இந்தச் சமயத்திலாவது அவன் உணர்வு பெற்றுத் தன் வல்லமை இன்மையை உணர்ந்து நம்முடைய திருவடியில் வந்து விழுவான? அப்படி விழுந்தால் ஆட்கொள்ளலாம் என்று பார்த்தான். மாயம் வல்ல சூரன் தன் மாயங்களே எல்லாம் காட்டிப் போர் புரிந்' தானேயொழிய முருகப்பெருமானது உண்மையை உணர வில்லை. முருகன் என்ன, சின்னக் குழந்தைதானே? எனத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/124&oldid=825724" இலிருந்து மீள்விக்கப்பட்டது