பக்கம்:சித்தி வேழம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகன் அழகு 119 தலைதருக்கிப் பகை உணர்ச்சியிலே வெறி பிடித்து நின்ருன் அவன். நம் பெருமையை இவன் உணரமாட்டான் என்னும் எண்ணம் முருகனுக்கு உண்டாயிற்று. நம்முடைய திருவுரு வத்தைக் கண்டால்ே யாவரும் உள்ளம் கசிந்து உருகுவார் களே! இந்தப் பாவிக்கு அந்த கிலே வரவில்லையே' என்று எண்ணினன். அப்போது முருகப்பெருமானுக்கு ஒரு கருத் துத் தோன்றியது. நம்மை இவன் கண்கொண்டு பார்க்க வில்லை. நான் சின்னஞ் சிறிய உருவத்தில் இருப்பதல்ை பெரிய கண்ணும், பெரிய உடம்பும் உடைய அசுரனுக்கு நம் முடைய அழகு புலகைவில்லை என்று எண்ணினன். அவ னுடைய கண் கிரம்பும்படி பெரிய திருவுருவம் ஒன்றை எடுத் துக்கொண்டான். எப்படியாவது அவனுடைய உள்ளத்தை உருக்கவேண்டும், அறியாமையை ஒழிக்கவேண்டும் என்ற எண்ணத்தினுல் அந்த அழகுப் பேருருவத்தை எடுத்துக் கொண்டான். - நம்முடைய வீட்டில் எறும்புகள் சாரிசாரியாகப் போகின் றன. எறும்புக் கூட்டத்திலும் ஆண் பெண் உண்டல்லவா? எறும்பு இனத்தில் ஒரு கல்யாணம் நடப்பதாக வைத்துக் கொள்வோம். மாப்பிள்ளை எறும்பும் பெண் எறும்பும் ஊர் வலம் போகிருர்கள். மனித இனத்தில் மாப்பிள்ளை அழகு என்ருல் எறும்பு இனத்திலும் மாப்பிள்ளே எறும்பு அழகாகத் தான் இருக்கும். ஆனல் நம் பார்வையில் எல்லா எறும்பும் ஒரேமாதிரியாகவே தோன்றுகின்றன. எறும்புகள் போகும் போது அவற்றின் உருவச் சிறப்பும், அழகும் நம் கண்ணுக், குப் புலனுவதில்லை; வெறும் உருவம் மாத்திரம் தெரிகிறது. அதுபோல் சூரபன்மனுடைய புறக்கண்ணின் எதிரே வந்து முருகன் நின்றபோதும், யாரோ குழந்தை இங்கே வங் திருக்கிறது என்று எண்ணிேைனயன்றி அவனுடைய பேரழகைக் காணுகின்ற ஆற்றல் அவனுக்கு இல்லே. அதனே உணர்ந்து முருகன் மிகப் பெரிய திருவுருவத்தை எடுத்துத் தன்னுடைய அழகு அவனுக்குப் புலகுைம்படி செய்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/125&oldid=825725" இலிருந்து மீள்விக்கப்பட்டது