பக்கம்:சித்தி வேழம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 } சித்தி வேழம் கிறது. நம்முடைய திருவுருவத்தைக் கண்டாவது இவன் உருகமாட்டான உருகும் இயல்பு இருந்தால் இந்தப் போரை விரைவில் முடித்து இவனே ஆட்கொள்ளலாம் என்று கருதித் தான் முருகன் தன் திருவுருவத்தைக் காட்டினன். அந்த உரு வத்தின் பேரழகு சூரபன்மனே மயக்கிற்று. அப்போது அவன் உள்ளம் உருகுகிறது. அடியார்கள் முருகப்பெருமா னுடைய திருவுருவப் பேரழகைக் கண்டு கண்டு, பின்பு அவன் திருவடியைப் பார்த்து அதிலே தங்கள் உள்ளம் வண்டாக மொய்க்கக் கிடப்பார்கள். அதே கிலே சூரபன்ம னுக்கு வந்துவிடுகிறது. முருகப்பெருமானது ரூப லாவண் யத்தை நன்ருகப் பார்த்து, முற்றக் கண்டு முடிவு பெருமை யினுல் மெல்ல மெல்ல அவன் சரணத்திலே தன் கருத்தைப் பதிக்கிருன். அவன் கண்களிலே இதுகாறும் நின்ற மாசு அகலுகிறது. 'அடடா இந்தச் சரணம் விமலமாகிய சரணம் அல்லவா?’ என்பது புல்கிைறது. மலச் சார்பற்ற, மலம் உள்ள இடத்தில் சார்ந்தால் அந்த மலத்தைப் போக்கக் கூடிய சரணம் அது. அந்தச் சரணத்தின் அழகு தூய அழகு. அழகில் இரண்டு வகை உண்டு. புறக்கண்களில் பட்ட மாத்திரத்தில் சில அழகுகள் உள்ளத்தில் தூய எண்ணத்தை உண்டாக்கும்; சில அழகுகள் கெட்ட எண்ணத்தை உண்டாக். கும். உள்ளத்தில் கெட்ட எண்ணத்தை உண்டாக்குகிற அழகு மாய அழகு, அது தூய அழகாகாது. அப்படியின்றித் தூய எண்ணங்களே உள்ளத்தில் உண்டாக்குகின்ற அழகு எதுவோஅதுதான் தூய அழகு என்று சொல்லப்படும். சித்திர மாதர்களுடைய அழகு மாய அழகு; மீட்டும் மீட்டும் பிறப் புக்கும் இறப்புக்கும் காரணமாக்கும் அழகு உள்ளத்தில் வெறியை ஊட்டும் அழகு. கற்புடைய மகளிரின் அழகு அத் தகைய மாசை உள்ளத்தில் உண்டாக்காது. அத்தகையவர் களைக் கண்டால் நம்முடைய அன்னையைக் காண்பது போன்ற உணர்ச்சி உண்டாகும். அல்லாதவர்களுடைய அழகு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/128&oldid=825728" இலிருந்து மீள்விக்கப்பட்டது