பக்கம்:சித்தி வேழம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகன் அமுகு 123 வெறியை ஊட்டுவதனலே அதை மாய அழகு என்று சொல்லலாம். வெறியை அடக்கி, அமைதியைப் பெற வைத்துத் தூய இன்பத்தை உண்டாக்குகின்ற பேரழகே துாய அழகாகும். இத்தகைய தூய பேரழகை உடையவன் முருகன். அது எதல்ை தெரிகிறது? முருகனுடைய பேரழகில் தன் உள்ளத் தைப் புதைத்து கிற்கிருன் சூரபன்மன். ஒவ்வோர் உறுப்பாக அவன் கண் பார்த்து வரும்போதே அந்த அழகு அவன் உள்ளத்தைத் தூய்மைப் படுத்துகிறது. மேலேயுள்ள கங்தையை விசிறி எறிந்து, தலையில் உள்ள பாரத்தை எல் லாம் தூக்கி எறிந்து, மனத்தில் உள்ள அழுக்கு நீங்க, உடம்பு லோசாகத் தோற்ற நிற்கின்ற ஒரு வகை இன்பம் அவனுக்குத் தோற்றுகிறது. ஆகவே, 'விமலமாம் சரணம் தன்னில் தூய இன் வெழிலுக்கு” என்று சொல்லும்போது அவன் ஒரு வகையான இன்பக் கிளுகிளுப்பில் நிற்கிருன், "துாய இவ்வெழில்’ என்று சொல்வதில் ஒரு நயம் இருக்கிறது. முருகப்பெரு மானே அவன் நெருங்கிவிட்டான். கடவுளே அவன் அவன்' என்று வேதம் சொல்கிறது. அவனே நெருங்கிய அன்பர்கள் இவன் என்று சொல்வார்கள். சூரபன்மன் இதற்கு முன் ல்ை முருகப் பெருமானின் முன் கின்ருலும் இதுவரைக்கும் நெருங்கவில்லை. ஆயிரம் காத தூரம் விலகி நின்றவனைப் போல நின்ருன். இப்போது எம்பெருமானின் அழகில் ஈடு பட்டு அடியார்களேப் போல உள்ளுணர்ச்சி கொண்ட தால் நெருங்கிவிட்டான். முருகப்பெருமானுடைய கை எட்டும் தூரத்தில் நிற்கிருன் கருத்துக்கு எட்டும் அண்மை. யில் இருக்கிருன். ஆகவே இந்தத் தூய எழில் என்று. அண்மைச் சுட்டைப் போடுகிருன். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/129&oldid=825729" இலிருந்து மீள்விக்கப்பட்டது