பக்கம்:சித்தி வேழம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மடல் தொடங்கிளுள் தலைவிக்கு முருகன்மேல் அடங்காத காதல் உண்டாகி விட்டது. அவனுடைய அருள் தனக்குக் கிடைப்பது அரிது என்று அஞ்சிள்ை. உள்ளத்தே தோன்றிய காதலே மாற்ற இயலுமா? ஒருவனுக்கென்று அளித்த உள்ளம் வேறு யாருக் கும் இடம் கொடாதே! ஊரார் அறியத் தன் ஆற்ருமையைச் சொல்லிப் புலம்பிப் பிறர் நெஞ்சில் இரக்கம் உண்டாகும். படி செய்யலாமா என்று யோசித்தாள். அப்போது அவளுக்கு ஒரு கினேவு வந்தது. - காதலன் ஒருவன் தான் காதலித்த பெண்ணே மணம் செய்ய விரும்பி அதற்கு ஆவன செய்கிருன். பெண்ணேப் பெற்றவர்கள் இணங்குவார்கள் என்று தோன்றவில்லே. அதல்ை தன் உள்ளத்தைக் கொள்ளே கொண்ட காதலியை அவளுல் மறந்துவிட முடியுமா? ஊரார் அறியத் தனக்கும் அவளுக்கும் உள்ள தொடர்பை வெளியிட்டுச் சான்ருேர்முன் கின்று அவர்களுக்கும் அதனேப் புலப்படுத்தில்ை, அவர்கள் உண்மையை உண்ர்ந்து இருவரையும் ஒன்றுபடுத்துவார்கள். தம்மிடையே உள்ள நட்பையும் தன் காதலியைப் பெறும் உரிமை தனக்கு இருப்பதையும் மற்றவர்களுக்குத் தெரிவிக்க அவன் ஒர் உபாயம் செய்வான். பனமடலால் குதிரையைப் போன்ற உருவத்தைச் செய்து, அதில் தன் படத்தையும் தன் காதலி படத்தையும் எழுதி மாட்டிக்கொள்வான். எருக்கு மாலே அணிந்து விகாரமான கோலம் புனைந்து, பைத்தியம் பிடித்தவனைப்போன்ற தோற்றத்துடன் அந்த மடல்மாவில் ஏறி ஊரைச் சுற்றி வருவான். இப்படிச் செய்வதற்கு மடலூர்தல் என்று பெயர். . . . -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/99&oldid=825833" இலிருந்து மீள்விக்கப்பட்டது