பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேலம் பகடாலு நரசிம்மலு நாயடு 29

அருத்தத்துடன் பதிப்பிப்பதிலும் காலத்தைக் கழித்தார்களே யொழிய, வெப்ஸ்டர், ஆக்லிவிர் முதலானவர்களைப் போல் பெரிய அகராதிகள் முதலான விஷய விவேக சாகராதி கிரந்தங்களை எழுதிப் பொதுஜன சமூகத்தாருக்குத் தக்கபடி உதவினார்களில்லை.

கடைசியாக இக்காலத்திலோ தமிழினால் திரவிய உதவியும் அந்தஸ்தும் கிண்டப்பதில்லை என்று கண்டு, அநேகர் அகராதிப் பண்டிதர்களாகிவிட்டார்கள். அந்தோ பாருங்கள்! நமது தமிழ்ப் பாஷைக்கு வந்த கஷ்டம்.

கோயமுத்துர் சிவன்பிள்ளையைப் போன்ற சிலரிடத்தில் சில புராதன கிரந்தங்களிருக்கினும் அவைகளைச் செல்லுக்குக் கொடுக்க விரும்புகிறார்களே யொழியப் பிறர் பார்த்துப் படிக்க வெளிவிடே னென்கிறார்கள். புராதன தமிழ் வித்துவான்களுடைய, நூல்களையும் சரித்திரங்களையும் படித்தாகிலும் சந்தோஷ மடையலாமெனில், இது விஷயமாகப் பண்டிதர் சாமிநாதய்யர் ஜில்லா ஜில்லாவாகத் திரிந்து பகீரதன் கங்கையைத் திருப்பப் பட்ட பாடெல்லாம் பட்டாலும் உண்மையான கிரந்தங்களும் சரித்திர சங்கதிகளும் கிட்டுவது கஷ்டமாக இருக்கின்றது. இதைப் பற்றி அப்பண்டிதர் அடிக்கடி சதேசமித்திரனில் எழுதிவருவதைப் படித்து வருகிறோமல்லவா! இனி எத்தனைக் காலந்தான் இப்பண்டிதர் பாடுபடக் கூடும் தேக கஷ்டத்தோடு பணத்தையும் செலவழிக்க வேண்டுமே. -

இது விஷயத்தில் பணத்தைச் செலவழிக்கும் பிரபுக்களும் இராஜர்களும் இக்காலத்திலில்லை என்று நமது சபாநாயகர் முன்சொன்னது நிஜமே ஆயினும், இது விஷயத்தைச் சோதிக்கும்படி

சேர நாட்டுக்குப் போனேன்.

- *

அங்குத் தமிழ்ப் பாஷாபிவிருத்திக்குப் பொருள் செலவழிக்கும் இராஜனில்லாததைக் கண்டு தயங்கினேன். பிறகு இது விஷயமாகச் சோழநாட்டுக் கேகினேன். அங்கும் அப்படிப்பட்ட அரசரைக் கண்டிலேன். கடைசியாக இப்போது புராதனமான பாண்டியன் நாட்டிற்கு வந்தேன். இங்கு இன்று இந்தச் சங்கத்துச் சபாநாயக ரத்தினமாகப் பிரகாசிக்கும் பாண்டித்துரைத் தேவருடைய தேசாபி மானத்தையும் தமிழ்ப் பாஷாபிமானத்தையும் காண, இவர்தான் முன் பாண்டிய நாட்டில் முச்சங்கங்களையும் பரிபாலித்து வந்த பாண்டியர்கள் யாவரும் கூடி ஒர் அவதாரமாக வந்ததாகக் கண்டு கொண்டதாக நினைக்கின்றேன். ஆம். அதற்குச் சந்தேகமில்லை. - - -