பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 சிறந்த சொற்பொழிவுகள்

இராமநாதபுர சேதுபதி சமஸ்தானத்தார் தொன்றுதொட்டு தமிழ்ப் பாஷையையும் சைவ சித்தாந்தப் பயிரையும் தழைத்தோங்கச் செய்து மங்காத புகழைப் பெற்றவர்களன்றோ?

நமது சபாநாயகருடைய உத்தம பிதாவான ரீமான் பொன்னுசாமித் தேவர் சமுகத்தில் ரீமான் தியாகராய செட்டியார், மாம்பழக் கவி முதலானவர்கள் வந்து பாடியும் சமுக வித்துவான்களோடு தருக்க மாடியும் பிரபல பிருதுகளைப் பெற்றார்களல்லவா?

றுரீமான் பொன்னுசாமித் தேவரே சமுத்திரவர்ணனை முதலான சிறந்த கிரந்தங்களை இயற்றி, இயலிசை நாடகப் புலவர் சிகாமணியாய் விளங்கவில்லையா !

அவர் காலத்தில் வேத சமாஜத்தை ஸ்தாபித்த மிஸ்டர் ராஜகோபாலாசாரியார் பிரசுரித்த தத்துவபோதினி பத்திரிகைக்கு அச்சியந்திரம் வாங்க 1000 ரூபாய் கொடுத் துதவவில்லையா?

இவ்வளவேன்? இப்போது இருக்கும் நமது சிரேஷ்ட சேதுபதியவர்கள் தமிழ் வித்துவான்களுக்கும் தமிழ்க் கிரந்தங்களுக்கும் தமிழ்ப் பத்திராதிபர்களுக்கும் வாரி வாரிக் கொடுத்த திரவியத்துக்குக் கணக்குண்டா? தமிழ் என்னும் பூங்கொடியைத் தாங்கும் கற்பக விருகூடித்தைப் போன்ற அந்தச் சேதுபதி வள்ளலார் இன்று இங்கு இல்லாதது நமது துர்ப்பாக்கியமே.

அவரைக் காண எவ்வளவோ ஆத்திரத்துடன் வந்தவர்கள் அவரைக் காணாமல் போதல் கண்களின் துர்ப்புாக்கியமே. அவரது அருமையான உபந்நியாசத்தைக் கேளாது திரும்புவது காதுகளின் துர்ப்பாக்கியமே! ஆயினும் நாமிப் போதிருக்கும் இப்பாடசாலையும் வித்துவான்களும் அந்த வள்ளலுடைய தரும குண கிைங்கரியங்களைப் பற்றிப் பிரத்தியrமாகக் கோஷிக்கையில் இம் மதுரையில் மறுபடியும் நான்காம் தமிழ்ச்சங்கம் ஸ்தாபிக்கத் தடை என்ன இருக்கிறது. -

அன்பர்களே! இவ்வுலகில் ஒரு கை தட்டினால் ஓசை உண்டாகாது. இரு கை தட்ட வேண்டும். ஆகவே, நமது பாண்டித்துரையவர்களும் சேதுபதி வள்ளலும் இது விஷயத்தில் கிருபா நோக்கங் கொண்டால் கூடிய சிக்கிரத்தில் சங்கம் ஸ்தாபிக்கப்படும்.

அதற்குப் பிரதி வருஷம் ஆவணி மாதம் சரஸ்வதி பூஜை காலத்தில் தமிழ்நாடுகளில் பரந்திருக்கும் பண்டிதர்களையும் கிரந்தங்களையும் பிரதிநிதிகாளகத் தருவித்தும், தக்க பண்டிதர்களால் பரீகூறித்தும்,