பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேலம் பகடாலு நரசிம்மலு நாயடு 31

பஹ9மானங்களையும் பட்டபிருதுக்களையும் கொடுத்தும், அவர்களியற்றிய கிரந்தங்களைப் பதிப்பித்துப் பிரபலமாக்கியும்,

கும்பகோணம் பண்டிதர் ரீலறு சாமிநாதய்ய ரவர்களையும் வேறு சில தக்க பண்டிதர்களையும் தெரிந்தெடுத்துத் தமிழ்நாட்டில் மறைந்து கிடக்கும் புராதனகிரந்தங்களையும், பாவலர் சாத்திரங்களையும் தேடிக் கொண்டுவரச் செய்து அவைகளைப் பதிப்பித்தும்,

சென்னைத் தமிழ்ப் பண்டிதர் ரீல பூ சூரிய நாராயண சாஸ்திரிகளையும் வேறு தக்கவர் சிலரையும் கொண்டு, வடமொழி ஆங்கிலோ பாஷைகளிலுள்ள நவநவமான நாடகங்களைத் தமிழில் மொழிபெயர்ப்பித்துப் பதிப்பித்தும்,

டிஸ்டிரிக்கு முன்சிப் பண்டிதர் மிஸ்டர் நல்லசாமி பிள்ளையையும் அவருக்குத் துணையாகச் சிலரையும் நியமித்துச் சைவசித்தாந்தாதி கிரந்தங்களை எழுதச் செய்து பதிப்பித்தும், -

மிஸ்டர் ஜி. சுப்பிரமணியம் ஐயரையும் அவருக்கு உதவியாகச் சிலரையும் சேர்த்து இராஜ்ஜிய விஷயமாகவும் அர்த்த சாஸ்திரம் கைத்தொழில் சாஸ்திராதிகளை ஆங்கிலேய பாஷையிலிருந்து மொழிபெயர்ப்பித்துப் பதிப்பித்தும், பி.ஏ., எம்.ஏ., பட்டமும் பெற்றுத் தமிழ்ப் பாஷையையும் நன்குணர்ந்த சுதேச வித்துவான்களைக் கொண்டு டிண்டல், ஸ்பென்ஸர், ஹக்ஸ்லி, லார்ட் கெல்வின், மில்டன், போஸ் முதலானவர்களுடைய தத்துவ சாஸ்திரங்களைத் தமிழ்ப்படுத்திப் பதிப்பித்தும், * ,

இதே மாதிரியாக ஆங்கிலேய பாஷையிலிருக்கும் பூகோள ககோள பவுதிகாதி சாஸ்திரங்களைத் தமிழில் பதிப்பித்தும், ஆகம வேத புராண இதிகாசங்களை அனைவரும் இலேசில் அறியும்படியான அகராதிகளையும், வெப்ஸ்டரைப் போன்ற பொது அகராதிகளையும் தமிழில் பதிப்பித்தும் வந்தால் சேதுபதியவர்களுடையவும், பாண்டித்துரையவர்களுடையவும் புகழ் இவ்வுலகம் உள்ள நாள் வரையில் மங்காமல் மகிமையைப் பெறுமென்பதில் சந்தேகமுண்டோ?

இச்சங்கத்தினால் நமது தேசத்துக் குண்டாகும் கூேடிமத்துக்குக் கங்குகரையுண்டோ?

பிரபுக்களே!. இது பெருத்த வேலைதான்! ஆனால், "ஆளுக்கொரு பிடி, ஆனைக்கு ஒரு சுமை” என்னும் பழமொழியைப் போல இத்தென்னாட்டில் தமிழ்மாதினிடம் அபிமானம் கொண்ட ஜமீன்தாரர்களும்,