பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எம். டி. சுப்பிரமணிய முதலியார் 47

5. 3-வது தமிழ்ச் சித்த வைத்திய மாநாடு - கண்காட்சிகள்

திருமலை நாயக்கர் மகால் மதுரை (19. 4. 1927)

(வரவேற்புக் கழகத் தலைவர், உத்தமபாளையம் எம். டி. சுப்பிரமணிய முதலியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு.)

சீமாட்டிகளே! கனவான்களே!! சித்த வைத்தியர்களே !!!

தெய்வப் புலவர்கள் கூடி முத்தமிழ்ச் சங்கம் வளர்த்துச் செந்தமிழ் ஆராய்ந்த இந்த மதுராபுரி என்னும் நான்மாடக் கூடலிலே, நாகரீகத்திற் சிறந்த பண்டைய காலத் தமிழ் மக்கள் மன்னன் அரசு புரிந்த பாண்டி நாட்டின் தலைநகராகிய மதுரையிலே, திருமலை நாயக்கர் மகாலிலுள்ள இந்தக் கொலுமண்டபத்தில் உங்களை எல்லாம் இந்த மகாநாட்டின் சார்பாக நான் வரவேற்கிறேன். இந்த மகா மண்டபத்தில் நாமெல்லோரும் கூடியிருப்பதானது, சித்த வைத்தியத்தின் முன்னேற்றத்திற்கு ஒரு பெரிய நல்ல காலக் குறி என்று எண்ணுகிறேன். .

வெளியூர்களிலிருந்து இங்கு வந்திருக்கிற பிரபுக்களுக்கும் சித்த வைத்தியப் புலவர்களுக்கும் அவரவர்கள் வேண்டியதற்குத் தக்கபடி செளகரியங்கள் செய்து கொடுக்க முடியாவிட்டாலும், எங்களால் ಆLL வரையில் இடவசதி முதலிய ஏற்பாடுகள் செய்திருக்கிறோம். அப்படிச் செய்திருப்பதில் ஏதாவது குறைபாடுகள் இருந்தாலும் பொறுத்துக் கொள்ளுவீர்க ளென்று நம்புகிறோம். - -

தமிழ் தொன்மை

நமது தமிழ் நாடானது உலகத்திலுள்ள எல்லா நாடுகளிலும் மிகப் பழைய நாடு என்று சரித்திர ஆராய்ச்சிக் காரர்கள் பலரும் கூறுகின்றனர். கன்னியாகுமரிக்குத் தெற்கே 49 தமிழ் நாடுகள் இருந்து கடலில் மூழ்கி விட்டதாகத் தமிழ் நூல்கள் கூறுகின்றன. . . .

தமிழ் நாகரீகம் பதினாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று