பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 சிறந்த சொற்பொழிவுகள்

இடைச்சங்கம், கடைச் சங்கம் முதலிய மூன்று சங்கங்கள் பத்தாயிரம் ஆண்டுகள் வரை நடைபெற்றதாகவும் கூறுகின்றனர். கடைச் சங்கமானது மறைந்து இற்றைக்கு 1800 ஆண்டுகள் ஆய்விட்டன என்றால், தமிழர் நாகரீகம் எவ்வளவு காலத்திற்கு முற்பட்டது என்பதைக் கவனியுங்கள்.

பதினெண் சித்தர் சித்த வைத்தியம்

முதற் சங்க காலத்திலேயே சகல தத்துவ நூல்களும், தமிழ் வைத்திய நூல்களும் இருந்திருக்கின்றன. ஆதியில் சிவனாரும் முருகவேளும் வைத்தியத்தை நந்திக்குச் சொன்னதாகவும், நந்தி மூலமாகத் திருமூலர், போகர் முதலிய பதினெட்டுச் சித்தர்களும் தெரிந்தார்கள் என்றும் சொல்லியிருக்கிறது. இந்தப் பதினெண் சித்தர்களும் தமிழ் மொழியில் எழுதியிருக்கிற வைத்தியத்தைச் சித்த வைத்தியம் என்று சொல்லுகிறோம்.

சித்த வைத்தியமானது எல்லா வைத்தியங்களுக்கும் முற்பட்டது என்று சொல்ல இடமிருக்கிறது. பெரிய படிப்பாளியாகிய லேட் திவான் பகதூர் எல். டி. சாமிக்கண்ணுப் பிள்ளை எம்.ஏ., பி.எல்., எல்.எல்.பி., ஐ.எஸ்.ஒ., சென்னைச் சட்டசபை பிரசிடெண்டு அவர்கள் 'ஜயினர், பெளத்தர், கிரேக்கர், உரோமர் நூல்களைக் காட்டிலும் நம் மருத்துவ நூல் முந்தியதெனக் கருத இடமுண்டு. நாம் கையாடிய நூல்கள் எல்லாவற்றிலும் இம் மருத்துவ நூலிலேயே பிறருதவியின்றி உழைத்திருக்கிறோம். என்றும்...... ஐயமின்றிச் சொல்லலாம் என்றும், மருத்துவத்திலோ என்றால் நாம் மற்ற நாடுகளிலிருந்து கைக்கொண்டது கொஞ்சம். நாமே உண்டு பண்ணியதும், மற்றவர்களுக்குப் பகுத்துரைத்ததும் அதிகம் என்றும், நமது மருத்துவப் பயிற்சியோ நாளுக்கு நாள் பரவி நமது நாட்டவரில் பெரும் பகுதியாரைக் கவர்ந்து கொண்டிருக்கிறது' என்றும் சொல்லியிருக்கிறார்.

சித்த வைத்தியத்தின் பெருமை ஆதலால் சித்த வைத்தியம் அனுபவத்தால் சிறந்தது என்று தெரிகிறது. ஆங்கிலம் முதலிய பிற வைத்திய முறைகளில் இப்பொழுது குணப்படுத்த முடியாது என்று சொல்லப்படுகிற தீராத வியாதிகளைச்

(Incurable Diseases) சித்த வைத்தியர்கள் குணப்படுத்தி இருக்கிறதில் சிலவற்றை நான் நேரில் கண்டிருக்கிறேன். r

சித்த வைத்தியம் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாகக் கையாளப்பட்டு வருவது. அதனால் அனுபவத்தில் சிறந்தது. நமது நாட்டு