பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 சிறந்த சொற்பொழிவுகள்

இனி ஆசியா கண்டத்தை எடுத்துக் கொள்வோம். ஜப்பான் மனித நிலையை அடைந்தது இளைஞர்களாலேயே. இப்பொழுது சீனாவில் அந்நிய ஆட்சியிலிருந்து விடுதலை பெறுதற்கு நிகழ்த்தப்படும் சண்டை இளைஞர்களுடையதன்றோ !

இந்தியாவில் பிராமண மதத்தை ஒழித்துப் புத்த மதத்தை நிலைநாட்டிய புத்தர் பெருமானும், தென்னாட்டில் சமண சமயத்தை ஒழித்துச் சைவ சமயத்தை நிலைநாட்டிய சம்பந்தரும் இளைஞர்களே. ஆகையினாற்றான் நம் நாடும் நம் வகுப்பும் முன்னேறுவதற்கு இளைஞர் இயக்கம் இன்றியமையாதது என்கின்றோம். இவ்வுண்மையை உணர்ந்தே நாங்கள் சென்னையில் திரு. சுரேந்திரநாத் ஆரியா அவர்களின் தலைமையின்பால் இளைஞர் சங்கம் ஒன்று நிலைநாட்டி அதன் கிளைச் சங்கங்களைப் பல இடங்களிலும் நிலைநாட்டிக் கொண்டு வருகின்றோம். நம் இளைஞர் இயக்கமும் வளர்பிறை போன்று வளர்ந்து வருதல் நமக்குப் பெருமகிழ்ச்சியைக் கொடுக்கின்றது.

இளைஞர்கள் செய்ய வேண்டுவது யாது?

இனி இளைஞர்கள் செய்ய வேண்டுவது யாது? முதலாவதாக, நம் பெரியோர் நம் நாட்டின் விடுதலைக்காகக் தொடுத்திருக்கும் போரில் நமது இளைஞர்கள் அவர்கட்குத் துணை செய்தல் வேண்டும். பார்ப்பன இளைஞர்கள் எவ்வாறு தம் வகுப்பு முன்னேற்றத்துக்காக உழைக்கும் திரு. சீனிவாசய்யங்கார், சத்தியமூர்த்தி கம்பெனியாருக்குத் துணை செய்கின்றார்களோ, அத்தன்மைத்தே பார்ப்பனரல்லாத இளைஞர்களும் பனகால் அரசர் போருக்கு இரத்தம் சிந்த முன்வரல் வேண்டும். ஏனெனில் பிராமணரல்லாதார் இயக்கந்தான் பார்ப்பனரல்லாத பெரியோர்கட்கும், இளைஞர்கட்கும் விடுதலையைக் கொடுப்பதாகும். மற்றும் நாம் பெரியோர்கட்கு உதவியாய் நின்றாலன்றோ அவர்கள் சட்டசபைக்குள் நுழைந்து நமக்குப் பள்ளிக்கூடங்களில் படித்து ... நியமிக்க முடியும்?

ஆகையினாற்றான் பெரியவர்களுடன் ஒத்துழைக்க வேண்டும் என்கிறோம். இது மட்டும் போதாது. பெரியோர்கள் உறங்குகின்ற காலத்து அவர்களை இளைஞர்கள் தட்டியெழுப்புதல் வேண்டும். அவர்கள் தவறுகின்ற காலத்துக் கண்டிக்கவும் வேண்டும். -

இரண்டாவதாக, நம் இளைஞர்கள் நம் நாட்டிலுள்ள சாதி வேற்றுமை, தீண்டாமை முதலிய பெரும் பிசாசுகளை ஒட்ட வேண்டும். அதற்காக அவர்கள் ஒய்விருக்கும் நேரங்களிலெல்லாம், கிராமங்களிடைச் சென்று சாதி வேற்றுமைகளின் கொடுமைகளையும் தீணடாமையின் அநியாயத்தையும் எடுத்துரைக்க வேண்டும்.