பக்கம்:சிறந்த சொற்பொழிவுகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சனக சங்கர கண்ணப்பர் 59

நம் பெரியோர்களாய நாயன்மார்களும், ஆழ்வார்களும் பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய பாக்களெல்லாம் சாதி வேற்றுமையையும் தீண்டாமையையும் கண்டிப்பனவாய் உள்ளன. இப் பாக்க்ளைக் கிராம மக்களுக்கு எடுத்துரைத்தால் அவர்கள் மனம் திரும்பாதிருக்குமோ? இப்பாக்களையெல்லாம் கேட்பார்களாயின் அவர்கள் தம் சாதிவேற்றுமை விலங்குகளை அடியோடு அறுத்து எறிந்து விடுவார்களென்பது திண்ணம்.

ஜப்பானில் சாதி வேற்றுமைகள் இளைஞர்களாலேயே அறுபட்டொழிந்தது. அத்தன்மைத்தே இந்தியாவிலும் சாதி வேற்றுமை ஒழிய வேண்டுமானால் அஃது இளைஞர்களாற்றான் முடியும்.

இனி நம் கோவில் அந்நிய மதத்தாராய பிராமணர்கள் கையில் இருக்கின்றபடியால், அங்குச் சாதி நாற்றமே வீசுகின்றது. அந்நிய மதத்தார் உள்ளே போகலாம், கோயிலின் மதத்தைச் சார்ந்தவர்கள் உள்ளே போகவியலாது. ஆதலான் நம் இளைஞர்கள் கோயில்களையும் மடங்களையும் அந்நிய மதத்தார் கையிலிருந்து மீண்டும் பெற வேலை செய்தல் வேண்டும். அகத்தியம் நேரிடின் சத்தியாக்கிரகமும் செய்யத் துணிதல் வேண்டும். -

நம் கோயில்களிலும் மடங்களிலும் உள்ள சாதி நாற்றம் ஒழிய வேண்டுமாயின் எல்லா வகுப்பாரும் கோயிலுக்குள் நுழைய நாம் வேலை செய்தல் வேண்டும். இதற்காக நாம் உயிர் கொடுக்கவும் துணிதல் வேண்டும். இத்துறையில் நம் நண்பர் திரு இராமநாதன் வேலை செய்து வருவது பாராட்டத் தக்கதாகும். அவர் முயற்சிக்கு நாம் துணை நிற்றல் வேண்டும். . . . . . . . . . . . .

மூன்றாவதாக, நம் இளைஞர்கள் நம் பத்திரிகைளாய 'திராடவிடன், குடியரசு, ஜஸ்டிஸ்” முதலியவைகளைக் கிராமங்கள் தோறும் பரப்புதல் வேண்டும். ஏனெனில் இப்பத்திரிகைகள்தான் நம் வாய்கள். -

இனி இறுதியாக நம் இளைஞர்கட்கு நான் ஒன்று கூற விழைகின்றேன். நீங்கள் அதிரா ஊக்கத்துடன் வேலை செய்தல் வேண்டும். உங்களால் நம் நாடு விடுதலை பெறவேண்டும். ஆகலான் எல்லா இடங்களிலும் இளைஞர் சங்கங்கள் நிறுவி இளைஞர் இயக்கத்தை வளர்த்து வருதல் வேண்டும். - - . . . . . . . . . . . ."

- திராவிடன், 16.5.1927