பக்கம்:சிலம்பொலி.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் கா. கோவிந்தன் - 123;

ஆகவே,கோவலனாலும் மன்னிக்கப்பட்ட மாதவியைக் கண்ணகி மன்னித்து ஒரு சொல் கூறவில்லை. ஆகவே" மாதவி குற்றம் உடையவளே என்றும், தென்னவனை மன்னித்துத் தீர்ப்பு வழங்கிய கண்ணகி, மாதவி குறித்து அத்தகைய தீர்ப்பு வழங்கவில்லை; ஆகவே, மாதவி குற்றம் உடையவளே என்றும், திரும்பத் திரும்ப எடுத்து, வைக்கும் வாதத்தில் வலுவில்லை. -

அது மட்டுமன்று: கண்ணகி மாதவியை மன்னிக்க வேண்டிய தேவை எழவில்லை. குற்றம் நிகழ்ந்து விட்டது என்ற நிலை ஏற்படும்போதுதான் மன்னிப்புக்குத் தேவை ஏற்படுகிறது. தவறு செய்து விட்டார் எனக் கொண்டு, ஒருவர் மீது குற்றம் சாட்டும் நிலை எழுந்து விட்ட பின்னரே, அவரை மன்னிக்கும் சூழ்நிலை உருவா கிறது. குற்றம் புரிந்து விட்டாள் மாதவி எனக் கண்ணகி கருதியிருந்தால்தான், மாதவியைக் கண்ணகி மன்னிக்க நேரிட்டிருக்கும். ஆனால், கண்ணகியோ மாதவி மீது குற்றம் கண்டு கோபம் கொள்ளவே இல்லை. ஆகவே, மாதவியைக் கண்ணகி மன்னிக்கும் பேச்சுக்கே இடம் இல்லை. கண்ணகி மாதவியைக் கோபித்துக் கொள்ளவில்லை என்பதைக் கண்ணகியைப் பிள்ளைப் பருவத்தில் பேணி வளர்த்த செவிலித்தாயாம் காவற். பெண்டே உறுதி செய்துள்ளாள். . . .

'மடம்படு சாயலாள் மாதவிதன்னைக் கடம்படாள் காதற் கணவன் கைப்பற்றிக், குடம்புகாக் கூவற் கொடுங்கானம் போந்த தடம்பெரும் கண்ணிக்குத் தாயர் நான் கண்டீர்! தண்புகார்ப் பாவைக்குத் தாயர் நான் கண்டீர்!" - - - வாழ்த்துக் காதை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பொலி.pdf/129&oldid=560752" இலிருந்து மீள்விக்கப்பட்டது