பக்கம்:சிலம்பொலி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 சிலம்பொ வி

ம.பொ.சி. அவர்களும் இதை உணராமல் இல்லை. கோவலன் கொலையுண்ட மறுநாள்தான், கண்ணகி அவன் உடலைக் கண்டாள் என்ற தம் வாதத்திற்குத் தடையாகக், "குரவைக் கூத்துக்கு முதல் நாள் மாலை யிலேயே கோவலன் கொலையுண்டான் என்றால் . அன்றிரவில் பிரிந்துசென்ற கோவலன் வரக் காணாமைக்கு வருந்தாமல், அமைதியாகக் கழித்திருப்பாளா கண்ணகி? கழித்திருப்பாள் என்று நம்புவது கண்ணகியின் கற்புக்கு இழுக்குக் கற்பிப்பது ஆகாதா? என்றெல்லாம் கேட்கப் படுகிறது" (பக்கம் 135i எனக் கூறிவிட்டு, அதற்கு விடை யாக, "கோவலன் தன்னைப் பிரிந்து சென்ற நாளில்குரவைக் கூத்து நிகழ்வதற்கு முதல் நாளில்--இரவில் , கண்ணகி உள்ளம் குலைந்தாள்; மனம் வருந்தி வெதும் பினாள் பக்கம் 135) என்று கூறி, அதற்கு ஆதாரமாக,

காதலற்காண்கிலேன்; கலங்கி கோய் கைம்மிகும் ஊதுலை தோற்க உயிர்க்கும் என்நெஞ்சன்றே; ஊதுலை தோற்க உயிர்க்கும் என்நெஞ்சாயின், ஏதிலார் சொன்னது எவன்? வாழியோ! தோழி!

நண்பகற்போதே நடுக்குநோய் கைம்மிகும்

அன்பனைக் காணாது அலவும் என் நெஞ்சன்றே; அன்பனைக் காணாது அலவும் என் நெஞ்சாயின், மன்பதை சொன்னது எவன்? வாழியோ! தோழி!

தஞ்சமோ தோழி! தலைவன் வரக்காணேன் வஞ்சமோ உண்டு மயங்கும் என் நெஞ்சன்றே; வஞ்சமோ உண்டு மயங்கும் என்நெஞ்சாயின் எஞ்சலார் சொன்னது எவன்? வாழியோ! தோழி! "

என்ற இப்பாக்களைக் காட்டி, "இங்கு ஒர் இரவு கோவலன் வரத் தவறியமைக்கு, அந்த இரவில் அவள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பொலி.pdf/34&oldid=560657" இலிருந்து மீள்விக்கப்பட்டது