பக்கம்:சிலம்பொலி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் கா. கோவிந்தன் 29.

அடைந்த மனத்துயரம் அவளாலேயே விளக்கப்படுகிறது அன்றோ?' (பக்கம்: 136) என்ற வினா எழுப்பி முடித் துள்ளார். -

எடுத்துக் காட்டிய பாக்கள் மூன்றும்,குரவை முடிவில்

ஊர் அரவம் கேட்டு வந்த ஆயர் முதுமகள் ஏதும் சொல்லாடா நிலை கண்டு, கண்ணகி கலங்கிக் கூறியவை. இவை, குரவைக்கூத்து நிகழ்வதற்கு முற்பட்ட காலத்தில் முந்திய நாள் இரவில் கண்ணகி உற்ற துயரை உணர்த்து வனவாயின், நோய் கைம்மிகும்', 'நெஞ்சு உயிர்க்கும்'; 'நெஞ்சு அலவும்" என வந்திருக்கும் வினைச் சொற்கள் எல்லாம்,"நோய் கைம் மிகுந்தது', 'நெஞ்சு உயிர்த்தது". 'நெஞ்சு அலவுற்றது” என இறந்த காலம் உணர்த்து வனவாக யிருத்தல் வேண்டும். ஆனால், அவை: அனைத்தும் நிகழ்கால வினைச் சொற்களாகவே வந்துள்ளன.

மேலும், அவ்வினைச் சொற்கள், நோய் கைம் மிகுதலும், நெஞ்சு உயிர்த்தலும், அலவுறுதலும், மயங்கு. தலும் ஆகிய அவ்வினைகள், நிகழ்கால நிகழ்ச்சிகள் என்பதை மட்டும் உணரத்தான் துணை புரிகின்றனவே. ஒழிய, அவை இரவில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளா? பகலில் விளைந்த வினைகளா என்பதை உணரத் துணை புரிய வில்லை. ஆகவே, கோவலனைப் பிரிந்திருந்த, குரவை நிகழ்வதற்குமுந்தியநாள் இரவில் கண்ணகி பிரிவாற்றாது வருந்தினாள் என்பதற்கு, இப்பாக்கள் சான்றாகமாட்டா.

கோவலனைப் பிரிந்து, கண்ணகி இரவில் வருந்திப் புலம்பினாள் என்பதற்குச் சான்று பகரும் செய்யுள் எதுவும் சிலப்பதிகாரத்தில் இல்லை. கோவலனைப் பிரிந்த இரவு இருந்திருந்தால் அல்லவோ, அவ்விரவில் கண்ணகி உற்ற பிரிவுத் துயரை இளங்கோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பொலி.pdf/35&oldid=560658" இலிருந்து மீள்விக்கப்பட்டது