பக்கம்:சீவகன் கதை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 கோவிந்தையார் மணம் : சீவகன் கதை தன் மனை நோக்கி வெற்றியோடு திரும்பிய மைந்த னைத் தாயும் தந்தையும் 'வருக!' என வரவேற்று, ஆரத்தி முதலியவற்றால் திருட்டி கழித்து, அழைத்துச் சென் றனர். பெண்டிர் பலர் மங்கலப் பொருள்களை ஏந்திச் சீவகனை வரவேற்றனர். அந்த வேளையில் ஆயர் குலத் தலைவனாகிய நந்தகோன் அங்கு வந்து நின்றான்; தன் நிரை மீட்கப்பட்டமையின் பெருமகிழ்ச்சியுற்றவ னாய்ச் சீவகனோடு பேசலானான். கட்டியங்காரன் கொடு மையினால் அந்நாட்டு அரசன் கொல்லப்பட்டதனால் வருந்தி இறக்க நினைத்த அவன், அரசியின் வழி மகவு உண்டாயிற்றென்று உற்றறிந்தமையால் உயிர் வாழ் கின்றவன் என்று தன்னைப்பற்றியும், தன் அரச பத்தி யைப்பற்றியும், கட்டியங்காரனிடம் கொண்ட வெறுப் பைப்பற்றியும் கூறினான்; பின்னர்த் தனக்கும் தன் கற் புடை மனைவியாகிய கோதாவரிக்கும் பிறந்த 'கோவிந்தை' என்னும் பெண்ணருங்கலத்தைப்பற்றியும், அன்று பசுக் கூட்டத்தை மீட்டார் அவளைப் பெறுவார் என்று தான் கூறியதையும் விளக்கினான்; 'வாடலில் வதுவை கூடி மணமகனாக!' என்று வேண்டிக்கொண்டான்; மேலும், கோவிந்தையின் நல்லியல்புகளையும் எடுத்து உணர்த்தினான். அனைத்தையும் கேட்ட சீவகன் ஆழ்ந்து எண் ணினான். தான் அதுகாலை மணம் செய்துகொள்வது தக்கதன்று என உணர்த்திற்று அவன் உள்ளம். அரச குலத்தில் பிறந்த தான் அப்போது அந்த முறையில் மணம் ஏற்பது நல்லதன்று என நினைத்தான். உடனே அவன் தன் தம்பியாகிய வணிகர் குலத்து வந்த பதுமுகன் என்பானுக்குக் கோவிந்தையைக் கொடுக்கலாம் என்று முடிவு செய்தான். உடனே தன் கருத்தை உள்ளடக்கி நந்தகோனிடம் அவன் மகளை ஏற்றுக்கொள்வதாகக் கூறினான்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/49&oldid=1483710" இலிருந்து மீள்விக்கப்பட்டது