பக்கம்:சீவகன் கதை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பிறப்பும் வளர்ச்சியும் 49 சீவகன் இசைவறிந்த நந்தகோன் மணத்துக்கு ஏற் பாடுகள் செய்தான். கோதாவரி பெற்ற கோவிந்தை யைச் சிறப்புச் செய்து அழைத்துக்கொண்டு வந்து நந்த கோன் நிறுத்தினான். பின்பு சீவகனும் 'பாறுகொள் பருதி வைவேல் பதுமுகக் குமரற்கு,' என்று அவளையேற் றுக்கொண்டான்; பதுமுகனுக்கு முறைப்படி அவளை மணம் செய்து கொடுத்தான். பதுமுகனும் கோவிந்தை யும் இன்பக் கடல் புக்கு இனிமையுற நலம் பெற்று நின்றார்கள். இது நிற்க. சீதத்தன் செயல்: ஏமாங்கதநாடு வயல் வளத்தோடு வாணிப வளனும் சிறந்த நாடு. அந்நாட்டுப் பெருவணிகர் பல நாடுகளுக் கும் சென்று தத்தம் வணிக வளனைப் பெருக்கிக் கொண்டு வந்தனர். அவ்விராசமாபுரத்து வணிக வீதியே ஒரு தனிப்பெருமையோடு விளங்கிற்று. பற்பல வணிக மக்கள் குபேரர்கள் எனும்படி சிறந்து விளங்கினார் கள். அவருள் ஒருவன் சீதத்தன். அவன் பதுமை என்னும் கற்புடைச் செல்வியின் கணவன். ஒன்றுமற்றவர்கள் ஒன்றைப் பத்தாக்கி,பத்தை நூறாக்கி, வாணிப வழி யினால் பொருளைப் பெருக்கி நிற்பதைக்கண்ட அவன், மேலும் தான் பொருளைத் தேடின் அல்லது தனக்கு இவ்வுலகம் இல்லை என்பதை உணர்ந்து கடல்மேல் செல்ல நினைத்தான். பொருளின் பெருமையைத் தேவர், செய்கபொருள் யாரும்செறு வாரைச்செறு கிற்கும் 6 எஃகுபிறி தில்லைஇருந் தேஉயிரும் உண்ணும் ஐயமிலை இன்பம்அற நேடுஅவையு மாக்கும் பொய்யில்பொரு ளேபொருள்மற் றல்லபிற பொருளே.' (497) என் று பொருள் உலகில் பகை வெல்லற்கும், அறனும் இன்பமும் பெறுதற்கும், பிற எல்லா வகைகளிலும் சிறப் பதற்கும். தேவையானது என்பதை விளக்கினார். ஆம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/50&oldid=1484618" இலிருந்து மீள்விக்கப்பட்டது