பக்கம்:சீவகன் கதை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இராசமாபுரத்தே தத்தையோடு கூடி வாழாவிடின், என் பெயர் கெடு தாக!' என்று சபதம் செய்தான். 63 வ சீவகன் அரசரோடு செய்யும் முதற்போர் இதுவே யாகும். முதலில் பசுக் கூட்டம் கவர்ந்து சென்ற வேட ரோடு அவன் போர் செய்யாது அவர்களை விலக்கிப் பசுக் கூட்டத்தை மீட்டதை மட்டும் அழகுபடக் காட்டும் தேவர், இங்கு அவன் போர் பற்றித் திறம்படப் பல பாடல்களால் விளக்குகிறார். பல மன்னர்களுக்கு இடை யில் தான் ஒருவனாய் நின்று அவன் எப்படி அனைவரையும் வெற்றி கண்டான் என்பதை எண்ண அவர் உள்ளம் மகிழ்வில் சிறக்க, அம்மகிழ்ச்சிவழிப் போர் வர்ணனையும் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. யானை,தேர், குதிரை முதலிய எல்லாவற்றின் போர்களையும் குறித்து, பின்பு அவன் தனிமை நிலையும் கண்டு, பலபடப் பாராட்டு கின்றார் தேவர்; அழிந்த மன்னர் தோற்றோடுவதையும், முதுகிட்டார் மேல் அம்பு செலுத்தாத சீவகன் ஆண்மை யையும் எண்ணி எண்ணி டுத்துக் காட்டுகின்றார். இரண்டொன்று மட்டும் காண்போமாக: 6 ஒருவனே சிலையும் ஒன்றே யுடையதோர் களிற்றின் மேலான் அருவரை மார்பிற் சென்றது அறிந்திலன் எஃகம் இன்னும் பொருவரோ மன்னர் என்றான் பொருசிலை மடக்கி யிட்டார் வருகளி யானை மீட்டார் வாட்படை வாங்கிக் கொண்டார்.' என்றும், 'அருவரை நாகம் சுற்றி ஆழியான் கடைய அன்று (810) கருவரை குடையப் பட்ட கடலெனக் கலங்கி வேந்தர் திருவரை மார்பன் திண்தேர் மஞ்ஞையே முருகன் றான்என்று ஒருவரோடு ஒருவர் கூடா வண்ணமே உடைய லுற்றார்.' (812) என்றும் அப்போர் நிலையைப் பாராட்டுகின்றார் தேவர். அரசர்தம் கடல் போன்ற படை உடைந்தது. எதிர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/64&oldid=1483806" இலிருந்து மீள்விக்கப்பட்டது