பக்கம்:சீவகன் கதை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

64

     சீவகன் கதை

நிற்பார் எவருமில்லை. பின்பு சீவகன் தன் துணைவரோடு தத்தையையும் தோழிகளையும் அழைத்துக்கொண்டு தன் மனைக்கு வந்து சேர்ந்தான்.

    போர்ச் சிறப்பைக் கூறிய தேவர், உடனே மணச் சிறப்பைக் கூறி, நம் எண்ணத்தினின்று அப்போரின் கொடுமையை மறையச் செய்கின்றார்.

6 அங்கு

  மூழிவாய் முல்லை மாலை முருகுலாங் குழலி 
  னுளும்் ஊழிவாய்த் தீயோ டொக்கும் 
  ஒளிறுவாள்் தடக்கை யானும்' (833)

மணக்கோலம் கொண்டு நிற்கும் காட்சியை நம்முன் காட்டுகின்றார் தேவர். பெண்ணுக்குத் தந்தையாய் அவளை வித்தியாதர நாட்டிலே இருந்து அழைத்து வந்த சீதத்தன், நீர் வார்த்துத் தத்தையைச் சீவக னுக்குக் கொடுத்தான். சீவகனும் ஏற்றுக்கொண்டான். கொண்ட காந்தருவதத்தையோடு காளையாகிய சீவகன் கட்டிலேறிக் காதல் வாழ்வில் தலைப்பட்டான். கலுழவேகன் கடிதம் :

   தத்தையும் தானும் கலந்து வாழும் அந்த இன்ப நினைப்பிலே சீவகன் மகிழ்ந்திருந்தான். அவனைச் சார்ந் தோர் அனைவரும் இன்பக் கடலுள் ஆழ்ந்தனர். தத்தை யோடு சோலைக்கும் பிற நல்லிடங்களுக்கும் சென்று இனிது பொழுது போக்கினான் சீவகன். அவ்வாறு ஒரு நாள் சோலையில் இருக்கும் போது, தரன் என்னும் தூது வன் வந்து, சிறந்த பொருள்களையும் ஓர் ஓலையையும் சீவ கனிடம் சேர்ப்பித்தான். அம்முடங்கல் தத்தையின் தந்தையாகிய கலுழவேகன் எழுதியது. அவன் தான் தத்தையைச் சீதத்தனோடு அனுப்பியதையும் அவள் சீவ கனை மணப்பாள் என்பதை முன்னமே குறிப்பால் உணர்ந் ததையும் எழுதியிருந்தான்; பின்பு நடந்த யாழ்ப்போரை யும் மேல் நிகழ்ந்த மண வினையையும் தரன் மூலமாக
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/65&oldid=1484125" இலிருந்து மீள்விக்கப்பட்டது