பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

101

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


ஆராய்ச்சி நூல்கள் பல வெளியிட்டுள்ளார். ஈடில்லாப் புகழ் சேர்க்கும் வண்ணம், தமிழர் தலைவர் என்ற இவரது நூலைப்போல் தமிழில் ஒரு சிறந்த வாழ்க்கை வரலாற்று நூல் {Biography) வேறு கிடையாது. துணைவியார் சிவகாமி அம்மையார் சென்னையில் தமிழ்த் தொண்டாற்றி வருகிறார்.

மகளிர் குலதிலகம் வீராங்கனை மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், டாக்டர் அன்னிபெசண்ட் போன்ற தோற்றமுடையவர், அழுத்தமான குரல், ஆவேசமான பேச்சு, தேவதாசிக் குலத்தில் பிறந்து, சிறந்த சுயமரியாதைக்காரராகி, அந்தப் பொட்டுக்கட்டும் முறையை ஒழிக்கப் பாடுபட்டவர். “தாசிகள் மோசவலை” என்ற புத்தகம் இயற்றியவர். 1949-ல் திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்து, இறுதி மூச்சுவரை இயக்கப்பணி ஆற்றியவர்.

நாகை என்.பி. காளியப்பன் பெரியாருடைய அணுக்கத் தொண்டர்களில் ஒருவர். நல்ல மேடைப் பேச்சாளர். இன்றும் மதுக்கூரில் வாழ்ந்து வருகின்றார். இயக்கத்தின் பழைய செய்திகளைப் பெருமிதத்துடன் நினைவுகூர்ந்து, நிரல்படச் சுவைகூட்டிச் சொல்பவர்.

மாயூரம் சி. நடராஜன், சித்தர்காடு இராமையா, சின்னையா, நாகை மணி இவர்களெல்லாம் பேச்சாளர் என்பதைவிட அமைப்பாளர் என்ற சொல்லே பொருந்தும். பெரியார் கூட்டத்தில் எதிர்ப்பே தலைகாட்ட முடியாமல் செய்துவந்த வீரர்கள் இந்தப் பகுத்தறிவுப் பட்டாளத்தார்.

சர் ஏ.டி. பன்னீர்செல்வம் பண்பாளர். பெரியாரின் அன்புக்குரியவர். உயர் பதவி ஏற்க லண்டன் சென்றபோது விமானமே காணாமற்போய் முடிவு தெரியாமல் அகால மரணமடைந்த பெருவீரர் பெரும் பண்ணையூரைச் சார்ந்தவர். தஞ்சைத் தமிழ்வேள் உமாகேசனார் வழக்கறிஞர். கரந்தைத் தமிழ்ச்சங்கம் நிறுவிய சான்றோர். இவர் நண்பர் அய். குமாரசாமியார், நெடும்புலம் சாமியப்பா இவர்களெல்லாம் நீதிக்கட்சியினரேனும் பெரியாரை மதித்துக் கொண்டாடிய மாண்பு மிக்கவர்கள். தஞ்சை மாவட்டத்தின் பட்டியல் பிற்பகுதியிலும் தொடர்கிறது.

துவக்க முதல் பெரியாருடனிருந்த எஸ். இராமநாதன் எம்.ஏ.பி.எல். 1938-ல் இராஜாஜியுடன் காங்கிரசில் மீண்டும் சேர்ந்து அமைச்சராகி விட்டார். ஆனால் 1950-51-ல் வகுப்புரிமைப் போராட்டத்தில் பெரியாரிடம் இணைந்து பணியாற்றினார். அவர் இளவல் மாயூரம் எஸ், சம்பந்தம் 1938