பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

205


மாட்டார்கள் என்று அவர்களுக்குத் தெரியும். புத்தகங்கள் என்பது படித்த சீமான்களின் விவகாரம், அவர்கள்தான் அதற்குப் பதில் அளிக்க வேண்டும்.”

ரீபின் சொல்வதை பாவெல் புரிந்துகொள்ளவில்லை என உணர்ந்தாள் தாய். பாவெல் தனது கண்களைச் சுருக்கி விழிப்பதை அவள் கண்டாள். அவன் கோபமுற்றிருப்பதை உணர்ந்தாள்.

“மிகயீல் இவானவிச் இந்த வேலையைத் தானே செய்துவிட்டு, பிறர்மீது பழியைப் போடப் பார்க்கிறாரோ.....” என்று மெதுவாகவும், எச்சரிக்கையாகவும் சொன்னாள் தாய்.

“அதுதான் சங்கதி!” என்று தன் தாடியைத் தட்டிவிட்டுக்கொண்டு கூறினான் ரீபின். “தற்காலிகமாக!”

“அம்மா!” என்று வறண்ட குரலில் சொன்னான் பாவெல்; “நம்மில் யாராவது ஒருவன்—அந்திரேய் என்றுதான் வைத்துக் கொள்ளேன் — ஏதாவது ஒன்றைச் செய்துவிட்டு எனக்குப் பின்னால் வந்து ஒளிந்து கொண்டான் என்று வைத்துக்கொள், அப்புறம் அவனுக்குப் பதில் என்னைச் சிறைக்குக் கொண்டு போகிறார்கள் என்று நினைத்துப் பார், உனக்கு என்ன உணர்ச்சியம்மா உண்டாகும்?”

தாய் திடுக்கிட்டு, ஒன்றும் புரியாதவளாய் மகனைப் பார்த்தாள்.

“தோழனுக்குத் தோழன் இப்படித் துரோகம் செய்ய முடியுமா? சே! அது என்ன வேலை?” என்று தலையை அசைத்துவிட்டுச் சொன்னாள் அவள்.

“ஆஹா! பாவெல், உன்னை இப்போது தான் தெரிந்து கொண்டேன்” என்று இழுத்தான் ரீபின். பிறகு அவன் தாயின் பக்கம் திரும்பி, கேலியாகக் கண்ணைச் சிமிட்டிக்கொண்டு : “இது ஒரு நாசூக்கான விவகாரம்தான், அம்மா” என்றான். மீண்டும் அவன் பாவெலை நோக்கித் திரும்பி, உபதேசம் பண்ணுகிற தோரணையில், பேச ஆரம்பித்தான்; “தம்பி! உன் எண்ணங்கள் எல்லாம் இன்னும் பிஞ்சாய்த்தானிருக்கின்றன, பழுக்கவில்லை. சட்டவிரோதமான காரியம் என்று வரும்போது, கெளரவத்தையோ, நாணயத்தையோ பார்த்துக்கொண்டிருக்க முடியாது. நீயே யோசித்துப்பார், முதன் முதல் அவர்கள் சிறையில் தள்ளப்போவது எவன் கையில் புத்தகம் இருந்ததோ அவனைத்தான்: உபாத்தியாயர்களை அல்ல. இது முதலாவது, இரண்டாவது, உபாத்தியாயர்கள் அங்கீகரிக்கப்பட்ட புத்தகங்களை மட்டுமே கற்றுக்கொடுக்கிறார்கள் என்றே வைத்துக்கொள். அந்தப் புத்தகங்களிலும் தடை செய்யப்பட்ட புத்தகங்களில் உள்ள உண்மைகள்