உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நான் கண்ட சோவியத் ஒன்றியம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11


முதியோர் கல்வியோ நாம் நினைப்பது போல் முதற் கல்வியாக இல்லை. தொடர் கல்வியாக இருக்கிறது. தாய்மொழிப் படிப்பாகவும் நிற்கவில்லை. ஒன்றிய மொழிப் படிப் போடும் தேங்கவில்லை. பிறமொழிப் படிப்பாகவும் கிளைக்கிறது. இங்கன்றே வீடு தோறும் கலையின் விளக்கம் இருக்கும். வெள்ளத்தின் பெருக்கைப் போல் கல்விப் பெருக்கும் மேவுமாயின் பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம் விழி பெறுவதில் வியப்பேது. பதவி கொள்வதில் தடையேது.

கிளியே !
வாய்ச் சொல்லில் வீரரடி !
கூட்டத்தில் கூடிகின்று கூவிப் பிதற்ற லன்றி
நாட்டத்தில் கொள்ளா ரடி !-கிளியே
நாளில் மறப்பா ரடி!"
என்ற பாரதி பாடல் என் நினைவிற்கு வந்தது. ஆனால் அவர்களிடம் சொல்லவில்லை. ஏன்? உங்களிடம் சொல்லலாமே என்ற எண்ணத்தால்!