பக்கம்:நான் கண்ட சோவியத் ஒன்றியம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2. பயணச் சடங்குகள்.



ஒப்பந்தம் பலவகை. ஆளுக்கு ஆள் செய்து கொள்ளும் ஒப்பந்தம் ஒருவகை. நாடுகளுக் கிடையே ஏற்படும் ஒப்பந்தம் மற்றொரு வகை. பிந்தியதில் பல பிரிவுகள் உள்ளன. பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்று; வாணிக ஒப்பந்தம் மற்ருென்று; பொருள் நிதி உதவி ஒப்பந்தம் பிறிதொன்று. கலாச்சாரப் பரிமாற்ற ஒப்பந்தமும் உண்டு.

சோவியத் ஒன்றியமும் இந்தியாவும் கலாசாரப் பரிமாற்ற உடன்படிக்கை ஒன்று செய்துகொண்டுள்ளன. இதன்படி கல்வி, கலை, இசை ஆகிய துறைகளில் சிறந்தவர்களை இங்கிருந்து அங்கு அனுப்ப வேண்டும். அதேபோல் அங்கிருந்து இங்கு அழைத்து வந்து காட்டவேண்டும். இப் பரிமாற்றம், இரு நாடுகளும் ஒன்றையொன்று அறிந்துகொள்ளத் துணை செய்யும்; நல்லெண்ணத்தை வளர்க்கும்.
1967ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து சோவியத் ஒன்றியத்திற்குச்செல்வதற்கு, கல்வியாளருக்கு முறை வந்தது. மூவர் கொண்ட கல்விக் குழு ஒன்றை அங்கு அனுப்பிவைக்க இந்திய அரசு முடிவு செய்தது. எல்லா இராச்சிய அரசுகளுக்கும் அறிவித்தது. குழுவில் எவரைச் சேர்க்கலாம் என்று ஆலோசனை கேட்டது. தமிழ்நாட்டு அரசு என் பெயரைப் பரிந்துரைத்தது. இந்திய அரசு