பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

("llu" 19 'காலையில் உன் வீட்டோடு தொடர்பு கொள்ள நினைத்தேன். தொடர்பு கிடைக்கவில்லை. 'உன் வீட்டுத் தொலைபேசி இன்னும் பொருத்தப்பட வில்லையாம். இந்தத் தகவல்ை, தொலைபேசித் துறையிடம் இருந்து தெரிந்துகொண்டேன். "ஒரு திங்களாகியும் ஒருதுறையின் தலைவர் வீட்டில் தொலைபேசி வைக்காததைப் பற்றி எனக்குக் கோபம் வந்தது. "சென்னையிலுள்ள பெரிய அலுவலரைக் கூப்பிட்டுச் சொன்னேன். -- "இயக்குநர் சாது என்பதால், இவ்வளவு காலதாமதமா செய்வது? என்று மிகுந்த காரமாகவே கேட்டேன். "இன்றைய மாலைக்குள் பொருத்திவிட்டுத் தகவல் கொடுப்பதாகச் சொல்லி, என் தொலைபேசி எண்ணைக் குறித்துக் கொண்டுள்ளார்” என்று மாண்புமிகு அளகேசன் அறிவித்தார். மாலை என் விட்டுக்கு வருவதாகவும் கூறினார். அப்படியே வந்தார். அதற்குள் என் வீட்டுக்குத் தொலைபேசி பொருத்தப்பட்டது. அமைச்சர் சொன்ன பிறகு சில மணிகளில் அவ்வேலையை முடித்த தொலைபேசித் துறை, ஒரு திங்களுக்கு முன்னரே, இரண்டொரு மணிகளில் முடித்திருக்கலாமே என்று எண்ணினேன். அரசின் ஒவ்வொரு துறையும் உடனுக்குடன் ஊழியம் செய்ய இருக்கிறது: "பெரியமனிதத் தன்மையைக் காட்டிக்கொள்ள அல்ல' என்கிற தெளிவு எளிதில் வருமா என்று ஏங்கினேன். o சென்ற முப்பதாண்டுகள் என்க்குக் கற்றுக் கொடுத்த பாடம் வான்ன? அன்னியர்களின் ஊழியர்களாக இருந்தால் தேனிக்கள் போல் செயல்படுவோம். நம்மவரிடம் நம்மவருக்காகப் பணி ஆற்றும்போது, பொறுப்பற்றே இயங்குவோம் என்பதுதான். மனிதத் தன்மை, கடமை உணர்ச்சி, சமுதாய உணர்வு. நாட்டுப் பற்று அனைத்தும் உலர்ந்துவரக் காண்கிறோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/59&oldid=788407" இலிருந்து மீள்விக்கப்பட்டது