பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 - நினைவு அலைகள் அளகேசன் அழைப்பு மத்திய அமைச்சர் அளகேசன் அன்று மாலை என் வீட்டுக்கு வந்து பாராட்டினார். தில்லிக்கு வரும்போது தம்மோடு தங்கும்படி கட்டளை இட்டார். தில்லிப் பயணம் இப்படி அழைக்கும் வேளை, நான் தில்லிக்குச் செல்லும் பயன ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. தில்லியில் அனைத்து இந்தியக் கல்வி இயக்குநர்கள் கூட்டம் கூட்டினார்கள். " - எதிர்நோக்கி உள்ள இரண்டாவது அய்ந்தாண்டுத் திட்டத்தில் எந்தெந்தக் கல்வியை எவ்வளவு வளர்ப்பது, அதற்காக என்ன செலவிடுவது என்பது பற்றிக் கலந்த்ாலோசித்து முடிவு எடுக்க அக் கூட்டம் கூட்டப்பட்டது. = அதற்குப் போகிறேனென்று சொன்னதும், திரு. அளகேசன் மீண்டும் அன்புக் கட்டளை பிறப்பித்தார். * அவ்வழைப்பினுக்கு முன்பே, என்னுடைய கல்லூரி நண்பரும் அப்போது நாடாளுமன்ற மாநிலங்கள் அவையின் சுயேச்சை உறுப்பினருமான திரு. தி. வி. கமலசாமி இல்லத்தில் தங்குவதற்கு ஏற்பாடு செய்து இருந்தேன். அப்போது, புதுதில்லியில், தமிழ்நாட்டு அரசுக்கு என்று, விருந்தினர் இல்லம் கிடையாது. * எனவே, சென்னையிலிருந்து செல்லும் அலுவலர்கள் நண்பர்களோடு தங்குவதைவிட வேறு வழியில்லை. என் ஏற்பாட்டைக் கேள்விப்பட்ட இ. வி. அளகேசன், அவருடைய நண்பராகிய கமலசாமியிடம் பேசினார். நான் அளகேசன் இல்லத்தில் தங்குவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கமலசாமியின் இசைவைப் பெற்றார். நான் தில்லியில் இருக்கும் நாள்களில், அமைச்சர் அளகேசன் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்ய ஏற்கெனவே திட்டமிட்டு இருந்தார். இருப்பினும் என்னைக் கவனித்துக் கொள்ள, தில்லியில் உள்ள தமது தனி அலுவல்ரோடு பேசி ஏற்பாடுகளைச் செய்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/60&oldid=788418" இலிருந்து மீள்விக்கப்பட்டது