உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிலையும் நினைப்பும், முதற்பதிப்பு.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

நிலையும் நினைப்பும்


போக்க என்ன செய்தது? ஏதாவது திட்டம் வைத்திருக்கிறதா? திட்டம் வைத்திருப்பதாக அறிகுறியே இல்லை.

எடுத்துக் காட்டாக நான் இன்று பத்திரிகையில் படித்த செய்தி ஒன்றை உங்களுக்குக் கூற விரும்புகிறேன். இன்று நமது நிலையும் நினைப்பும் எப்படி இருக்கிறது என்று பாருங்கள். இந்தச் செய்தியைக் கேட்கும் உங்களுக்கு அறியாமையையும் மூட நம்பிக்கையையும் போக்க திட்டம் இருக்க வேண்டிய இந்தியச் சர்க்காரிடம் எத்தகையத் திட்டம் இருக்கிறது என்பது தெரியும். மகாபாரதத்திலுள்ள சாந்தி பருவத்தை நேபாள மகாராஜாவிடம் சென்று அங்குள்ள சில ஆதார ஏடுகளைப் பார்த்து ஆராய்ச்சி செய்து புதிய சாந்தி பருவத்தை இந்திய சர்க்கார் வெளியிடப் போகிறார்களாம் எப்படி இருக்கிறது ஆராய்ச்சி ! வெளிநாடுகளில் அமெரிக்காவில் மேகத்தை மழை பெய்விக்க வைப்பதற்கு மேகங்கள் ஆகாயத்தில் உலவிக் கொண்டிருக்கும் பொழுது விமானத்தின் மூலம் அவைகளின் மீதுப் பனிக் கட்டிகளை வீசினால் மேகம் குளிர்ச்சி தாங்காமல் மழைத் துளிகளைத் தரும். பத்தினி பெய் என்றால் பெய்கிற இந்த நாட் களாக மழையில்லை. மழையை எப்படி பெய்யச் செய்வது என்று ஆராய்ச்சி செய்வது பற்றியோ அரசாங்கத்தாருக்கு கவலையில்லை. அமெரிக்காவில் மழை வேண்டியபொழுது பயிருக்குத் தரவானை நோக்கிக்கொண் டிருக்க முடியாது. தேவைப்பட்ட பொழுது மழையைப் பெற ஒரு மார்க்கம் வேண்-