உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிலையும் நினைப்பும், முதற்பதிப்பு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. என். அண்ணாத்துரை

27


டும் என்று ஆராய்ச்சி செய்து, விமானத்தைக் கொண்டு மேகக் கூட்டங்களின் மேல் பனிக்கட்டிகளை வீசி மழை பெய்விக்கக்கண்டு பிடித்திருக்கிறார்கள். இன்னும் மேகத்தையே உண்டாக்க ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்களாம். இந்தியாவில் மழை இல்லாதாதால் பயிர்கள் வாட, பயிர்கள் வாடுவதால் மக்கள் வாடுகிற நேரத்தில் இந்திய சர்க்கார் மகாபாரதத்தில் சாந்தி பருவத்தை ஆராய்ச்சி செயகிறார்கள். அமெரிக்காவில் பருவ மழை தவறினால் பருவமழையை தேவைப்பட்ட போது உண்டாக்க ஆராய்ச்சி செய்கிறார்கள். இரண்டு செய்திகளும் ஒரே அச்சகத்தில் அடிக்கப் பட்டு ஒரே செய்தித்தாளில் வெளிவரக் காண்கிறோம். இரண்டு நாடுகளைப் பற்றியும் உங்களுக்கு என்ன நினைப்பு தோன்றும். மக்கள் மழையில்லாமல் பட்டினியால்ச் சாகும்பொழுது மழையைப்பற்றி ஆராய்ச்சி செய்யாமல் சாந்தி பருவத்தைப்பற்றி ஆராய்ச்சி செய்யும் சர்க்காரைப் பற்றி பிறநாட்டார் என்ன நினைப்பர் ? நம் நிலையைக் கண்டு எள்ளி நகையாட மாட்டார்களா ? இது போகட்டும் இந்த நாட்டில் கொண்டாடப்படும் விழாக்களைக் கவனியுங்கள், மேல் நாட்டில் கொண்டாடப்படுகிற விழாக்களையும் கவனியுங்கள். இந்த நாட்டில் கொண்டாடப்படுகிற எந்த விழாக்களாவது ஒரு லட்சியத்தைப்பற்றி போதனை புரிவதாக அல்லது நினைவூட்டுவதாக அல்லது உலகத்தின் கவனத்தை இழுப்பதாக இருக்கிறதா என்று பாருங்கள். பிரான்சு நாட்டில் பிரஞ்சுப் புரட்சியைப் பற்றி விழாக் கொண்டாடுவார்கள். இரஷி-