பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பள்ளி நூலகங்கள் 87 கொள்வதற்கும், உலக நடப்புக்களை அறிந்துகொள்வதற் கும், பொது அறிவினைப் பெறுவதற்கும், அவர்கள் இயற்கையாகப் பெற்றிருக்கும் சில திறமைகளை வளர்ப்ப தற்கும், விஞ்ஞானம், கலை, தொழில் முதலியவற்றை நன்கு அறிந்து கொள்வதற்கும், சிறந்த வாழ்வியற் கருத்துக்களே, வாழ்க்கை உண்மைகளைத் தெரிந்து கொள்வதற்கும், அவ் வாறே ஆசிரியர்கள் தங்கள் அறிவினைப் பெருக்கிக் கொள் வதற்கும் துணை செய்யக்கூடிய நூல்கள் எல்லாம் இந் நூல சங்களில் இடம் பெறவேண்டும். மேலும் வீரச் சுவையூட் டும் காவியங்களும், கதைகளும், நல்ல கருத்துக்களைக் கொண்ட பொழுதுபோக்கு நூல்களும் வாங்கி வைக்கப்பட வேண்டும். பாடநூல்கள் அனைத்தையும் ஒருங்கே தனி யாக வைக்க வேண்டும். பாட நூல்கள் ஆசிரியருக்கும் அதே சமயத்தில் மாணவருக்கும் பயன்படுவனவாகும். எனவே ஒவவொரு பாட நூலிலும் மூன்று படிகள் ((apies) வாங்கி வைக்கலாம். நூல்களை வாங்கி வைத்தால் மாத்திரம் போதாது அவற்றைப் பாதுகாத்து அனைவர்க்கும் வழங்குவதற்கு பாலகப் பயிற்சி பெற்ருேரை நூலகர்களாக நியமித்தல் வேண்டும். முதலில் குறுகிய கால நூலகப் பயிற்சி (Certifi(al Course) பெற்ருேரையே நூலகராக நியமிக்கலாம். பின்னர் நூலகங்கள் நன்கு வளர்ந்ததும் நூலகவியல் பட்ட காரிகளேயே நூலகர்களாக நியமிக்கலாம். கால அட்ட வணயில் சில வகுப்புக்களை நூலக வகுப்புக்களாக அமைத் தன் மிக அவசியமாகும். நூலின் தன்மை, சிறந்த நூல்கள். பறுவகத்தின் சிறப்பு முதலிய தலைப்புக்களில் நூலகரே மாணவர்களுக்குப் பேசலாம். மேலும் நூலகக் குழு ஒன்று இருத்தல் வேண்டும். தவமையாசிரியர், நூலகர், ஆசிரியர், மாணவர்களில் சில அக்குழுவின் உறுப்பினர்களாக இருத்தல் வேண்டும்.