உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்


=-----

சம் புகக்கூடிய சிறு அறை ஒன்று நாலகத்திற்காக ஒதுக்கப் பட்டிருக்கிறது. ஆனல் அங்கு இருந்து படிப்பதற்குரிய இருக்கைகள் இருக்க மாட்டா. ஒரு சில பள்ளிகள் கடை நிலை ஊழியர் ஒருவரை நூலகத்திற்கென நியமித்துள்ளன. ஆளுல் அவர் பள்ளி அலுவலகத்திலேயே பணிபுரிந்து வரு வார். எனவே அவ்வறை எப்பொழுதும் மூடியேயிருக்கும். ஆசிரியர்களும் நூலக வளர்ச்சியில் அவ்வளவு அக்கறை காட்டுவதில்லை. இது வருந்துதற்குரியது. வேகமாக வளரும் இன்றைய உலகத்தில் நம் இளம் சந்ததியினர் வளமாக வாழவேண்டுமென்ருல், நிறைந்த கல்வி அறிவைப் பெற்று மேலைநாட்டுக் குழந்தைகளைப் போன்று சிந்தனைத் திறனைப் பெறவேண்டும். அதற்கு அவர்கள் படிக்கின்ற ஆர்வத்தைப் பெருக்க வேண்டும். அதற்குத் துணை புரிவன பள்ளி நூலகங்களே. எனவே மேலே கூறப்பட்டுள்ள குறைகளை நாம் நீக்க முயல வேண் டும். பள்ளியை நடத்துகின்ற பெருமக்கள் தனி நூலகக் கட்டிடம் கட்டாவிடினும், நூலகத்திற்கெனக் காற்றும் வெளிச்சமும் கொண்ட ஒரு பெரிய அறையினையாவது ஒதுக்குதல் வேண்டும். அவ்வறையினைத் தடுப்புக்களின் துணைகொண்டு மூன்று பகுதிகளாப் பிரித்துக் கொள்ள லாம். ஒரு பகுதியில் நூல்கள் வைக்கப்பட வேண்டும். அப்பகுதியிலேயே நூலகருக்கு இடம் ஒதுக்கலாம். மற். ருெரு பகுதியில் நாளிதழ்களும், ஏனைய செய்தி இதழ் களும் சேகரித்து வைக்கலாம். மூன்ருவது பகுதி ஆசிரியர் களும் மாணவர்களும் இருந்து படிப்பதற்கு ஒதுக்கப் L LGRJFTLD. பள்ளி இறுதி வகுப்பினைக் கொண்டிலங்கும் உயர்நிலைப் பள்ளிகள் அனைத்தும் குறைந்தது மூவாயிரம் நூல்களை யாவது கொண்டிருக்க வேண்டும். ஆயிரம் மாணவர்கள் பயிலும் பள்ளியில் குறைந்தது பத்தாயிரம் நூல்களாவது இருக்க வேண்டும். மாணவர்கள், உலகியலை உணர்ந்து