உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 (1 நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள் அறிவுச் சுதந்திரத்தைக் காப்பதும், உலகிலுள்ள எல்லா நூலகங்களுக்கும் தேவையான தகவல்களை வழங்குவதும் இக்கழகத்தின் முக்கிய பணிகளாக அமைந்துள்ளன. நூலகப் பொறுப்பாளர்கள் (Trustees), நூலகப் பணியில் அக்கறை கொண்டோர் முதலியவர்கள் இக்கழகத்தின் உறுப்பினர்களாக உள்ளனர். மேலும் நூலகச் சங்கங்கள், நூல் வெளியிட்டு நிறுவனங்கள். வாணிக நிறுவனங்கள் ஆகியனவும் இக்கழகத்தில் அங்கம் வகிக்கின்றன. இப் பொழுது இக்கழக உறுப்பினர்களின் எண்ணிக்கை 26,500-க்கும் அதிகம். அமெரிக்காவில் மட்டுமின்றி. உலகம் முழுவதிலுமுள்ள தனிப்பட்டவர்கள். நிறுவனங்கள் கல்வி, பண்பாடு பொழுதுபோக்கு, சமூக நலப்பணிகளில் ஈடுபாடு கொண்டிருக்கும் நிறுவனங்கள் இக்கழகத்தில் அங்கம் பெற்றிருக்கின்றன. இதல்ை உலகம் முழு வதற்குமே அருந்தொண்டாற்றும் இன்றியமையாத ஒர் உலக நிறுவனமாக இக்கழகம் உருப்பெற்றுத் திகழ்கிறது. உலகமெங்கும் நூலகங்களும் நூலகக் கல்வியும் நூலகத் தொழிலும் தரத்திலும் உயர உதவியும் அவை வளர் வதற்கு ஊக்கமும் ஆக்கமும் அளித்துத் தக்கப் பாதுகாப்புக் களை ஏற்படுத்தியும் சேவைபுரிவதே இக்கழகத்தின் குறிக் கோளாக அமைந்திருக்கிறது. அமெரிக்க நூலகக் கழகம் இன்று 13 பிரிவுகளுடன் (Divisions) இயங்கி வருகிறது. இக்கழகத்தின் பல்வேறு நடவடிக்கைகளை, இந்தப் பிரிவுகளும், நியமிக்கப்பட்ட குழுக்களும், கழகங்களும், வட்டமேசைப் பிரிவுகளும், மேற்கொண்டு வருகின்றன. கருத்துரை வழங்குதல், ஆலோசனை கூறுதல், தலைமை நிலையப்பணிகளைச் செய்தல் முதலியவற்றை, நிருவாக இயக்குநரின் மேற்பார்வையின் கீழ் இக்கழகத்தின் தலைமையகம் (ALA Headquarters) நேரடியாகக் கவனித்து வருகிறது. இக்கழகத்தின் உறுப் பினர்களினுல் தேர்ந்தெடுக்கப்பட்ட நிருவாகப் பேரவை