உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 5 நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள் நூல் வெளியீடு நூலகவியல் தொடர்பான நூல்களே வெளியிடுவதில் அமெரிக்க நூலகக் கழகம், நாட்டிலேயே முதலிடம் வகிக் கிறது. இலாப நோக்கமின்றிக் கூட்டுறவு முறையில் இந் நூல்களை வெளியிடுகிறது. இதற்கென இக்கழகத்தில், நால் வெளியீட்டுப் பிரிவு தனியாகச் செயல்பட்டு வரு கிறது. இது வெளியிடும் ஒவ்வொரு நூலையும், துண்டு வெளியீட்டையும் இக்கழக உறுப்பினர்கள் பெறலாம். தலைமை நிலையம் நூலகத் தொழிலை உடல் என்று கொண்டால், உட லின் ஒவ்வொரு செயலையும் அசைவையும் கட்டுப்படுத்தி இயக்கும் மூளை மண்டலம், இக்கழகத்தின் தலைமை நிலை யம் (A1A Headquarters) எனலாம். இத்தலைமை நிலையம் சிகாகோவில் இருக்கிறது. நூலகத் துறையில் உள்நாட்டி லும், வெளிநாடுகளிலும் அவ்வப்போது ஏற்படும் மாறு தல்களையும் அரசாங்கம் இத்துறை தொடர்பாக எடுக்கும் நடவடிக்கைகளையும், இயற்றும் சட்டங்களையும் உடனுக் குடன் அறிந்து அவை பற்றிய தகவல்களைக் கழக உறுப் பினர்களுக்குத் தலைமை நிலையம் உடனடியாகத் தெரிவிக் கிறது ஆண்டில் 11 முறை வெளியாகும் ஏ.எல்.ஏ. புல் லெட்டின் (ALA Bulletin) என்ற இதழின் மூலம் இந்தத் தகவல்களைப் பொதுமக்கள் அறிய முடிகிறது. அமெரிக்க நூலகக் கழகத்தின் நடவடிக்கைகள் பற்றிய கட்டுரைகளும், நூலகவியல் தொடர்பாக இத்துறையிலுள்ள அறிஞர்கள் எழுதும் கட்டுரைகளும், மற்றும் நூலகம் பற்றிய உள் நாட்டு வெளிநாட்டுச் செய்திகளும் இந்த இதழில் வெளி யிடப்படுகின்றன. நூலகம் பற்றிய தகவல்களைப் பொதுமக்கள் அறிந்து கொள்ளும்படிச் செய்வதற்காகவும், இத்துறையில் அவர் களுக்கு அர்வத்தைத் தூண்டி அவர்களின் ஆதரவைத்