பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. கல்லூரி-பல்கலைக்கழக நூலகங்கள் அமெரிக்கா குடியேற்ற நாட்டு ஆதிக்கத்திலிருக்கும் பொழுதே கல்லூரி நூலகங்கள் பல நிறுவப்பட்டு இயங்கி வந்தன. அப்பொழுதிருந்தே கல்லூரி-பல்கலைக்கழக நூலகங்களின் வரலாறு தொடங்கிவிட்டது எனலாம். முதலாவது கல்லூரி நூலகம் 1638-இல் ஹார்வர்டில் நிறுவப்பட்டது. ஜான் ஹார்வர்ட் என்பார் இப்புதிய நூலகத்திற்கு 329 நூல்களை அன்பளிப்பாக வழங்கினர், அமெரிக்கப் புரட்சி நடைபெற்ற நேரத்தில் 9 கல்லூரிகள் தொடங்கப் பட்டிருந்தன. ஆல்ை, அவற்றின் நூலக வளர்ச்சி மெதுவாகவே நடைபெற்று வந்தது. இந்நூலகங் கள் பெரும்பாலும் அன்பளிப்பாக வரும் நூல்களையே நம்பி யிருந்தன. அந்த நூல்கள் சிட ட ஆசிரியர்களுக்கு மட்டுமே கிடைத்தன. மாணவர்களுக்குக் கிடைக்கவில்லை. இந் நூல தங்கள் யாராவது ஆசிரியர் ஒருவரின் பகுதிநேர மேற்பார் வையில் இயங்கி வந்ததால், வாரத்தில் சில மணிநேரமே அவை திறந்து வைக்கப்பட்டிருந்தன. 19-ஆம் நூற்ருண் டின் முற்பகுதிவரை இதே முறையில்தான் இந்நூலகங் களின் செயல்முறை நீடித்து வந்தது என்ருலும் அவற்றின் வளர்ச்சி ஒரளவு வேகமடைந்தது என்று சொல்லவேண்டும். ஹார்வர்டு கல்லூரி நூலகத்தில், 1790-இல் 12 ஆயிரமாக இருந்த நூல்களின் எண்ணிக்கை 1849-இல் 56 ஆயிரத்