உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I () 3 நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள் லும் நூலகங்களில் ஏராளமான நூல்களை வாங்கி நிரப்பி அவற்றைப் பேணுவதால் மட்டும் பயனில்லை; அ ைற்றைத் தக்க முறையில் பயன்படுத்துவதற்குரிய வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்ற கருத்தும் ஓங்கியது. நூலகம் பற்றிய கருத்துக்களில் ஏற்பட்ட இம்மாறு தல்கள். நூலகக் கட்டிடங்களில் பிரதிபலித்தன. 19-ஆம் நூற்ருண்டிலும், 20 ஆம் நூற்ருண் டின் தொடக்க ஆண்டு களிலும் கட்டப்பட்ட நூலகக் கட்டிடங்கள். பழமைத் தோற்ற அமைப்புடனும், மத்தியில் கவர்ச்சியான மாடிப் படியுடனும், கனமும் வலுவும் பொருந்திய சுவர்களுடனும், உயர்ந்த மேற்கூரைகளுடனும், பெரிய விரிந்த படிப்பறை களுடனும் அமைந்தன. ஆனல் புதிய நூலகக் கட்டிடங்கள் எளிதில் இயங்குவதற்கு ஏற்ற எல்லா வசதிகளோடும். சிறிய கவர்ச்சியான படிப்பறைகளோடும் தனிப்பட்டவர் களுக்கான ஆராய்ச்சி வசதிகளோடும் அமைக்கப்பட்டிருக் கின்றன. அயோவா, கோலரோடா பல்கலைக் கழகங்களின் நூலகக் கட்டிடங்கள், புதிய நூலகக் கட்டிட அமைப்பிற்கு மாதிரியாக அமைந்துள்ளன. சில பெரிய நூலகங்களில் அண்மைக் காலமாக, பட்டப் படிப்பு மாணவர்களுக்குத் தனிப் பிரிவுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேற்கூறிய பிரிவுகளில் தெரிந்தெடுக்கப்பட்ட 75 000 முதல் 150,000 நூல்கள் வரை இடம்பெற்றுள்ளன. ԼI, IT :յնI வர்கள் அமைதியான சூழ்நிலையில் தங்கள் விருப்பப்படி படிப் பதற்கான வசதிகளைச் செய்துகொடுப்பதே இத்தனிப்பிரிவு களின் நோக்கமாகும். பட்டப் படிப்பு மாணவர்கள். தொழிற் கல்வி மாணவர்கள் ஆகியோரின் எண்ணிக்கை விரைவாகப் பெருகி வருவதால் அவர்களுக்கான நூலக வசதிகளும் அதிக அளவில் தேவைப்படுகின்றன. பெரிய நூலகங்களில் மாணவர்களுக்கென தனிப்பிரிவு ஏற்படுத்தி யிருப்பதால், மாணவர்களின் தேவைகளே முழு அளவில் நிறைவு செய்ய முடிகிறது. ஹார்வர்டிலுள்ள லெம்மாண்ட் நூலகம் 1949-இல் முடிவடைந்தது. இங்குதான் முதன்