பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I () of நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள் _ ஒருவர் என்ற விகிதத்தில் அமைந்திருக்கிறது. ஆனல் கல்லூரி நூலகங்களில் இவர்களின் எண்ணிக்கை சரிசம மாகவே அமைந்துள்ளது. கல்லுரி-பல்கலைக் கழக நூலகங் கள் வியக்கத்தக்க முறையில் வளர்ந்துள்ள போதிலும் கூட, பணிகளைச் செவ்வனே புரிவதில் அண்மைக்காலமாக அவை களுக்குப் பலவிதத் தொல்லைகள் ஏற்பட்டுள்ளன. மான வர்களின் எண்ணிக்கை அதிகமாகப் பெருகி வருவதும் நூல்கள் பெரும் அளவில் வெளியாகி வருவதும் நூலகத்தின் நூல் சேகரிப்பு நடவடிக்கைகள் விரிவடைந்து வருவதும், பாட நூல்களின் அடிப்படையில் அல்லாமல் நூலகத்தின் அடிப்படையில் கல்வித் திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டு வருவதும் இத்தொல்லைகளுக்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன. அதே சமயத்தில் உயர்கல்வி நிலையங்களைச் சேர்ந்த நூலகங்களுக்கென ஒதுக்கப்படும் நிதி குறைந்து கொண்டு வருகிறது. 1939-40 -இல் மொத்தச் செலவினத் தில் 3:7% நிதி நூலகங்களுக்கு ஒதுக்கப்பட்டது. 1957-58இல் இத்தொகை 2.4 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுவிட் டது.இடவசதிக் குறைவிலுைம் நிதிப் பற்ருக்குறையிலுைம் நுண்சுருள்களைப் பெரும் அளவில் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. மற்றும் பல சிக்கன முறைகளே யும் நுட்பங்களையும் கையாள வேண்டியதிருக்கிறது. விரி வடைந்து வரும் நூலகத் தேவைகளிளுல் தனி நூலகங் களுக்குப் பெருகிவரும் சுமைகளைக் குறைத்து உதவுவதற்குப் பல கூட்டுறவுத் திட்டங்கள் வகுக்கப்பட்டு நிறைவேற்றப் பட்டு வருகின்றன. நூலகங்களின் செலவுகளைக் குறைத்துப் பயன்களைப் பெருக்குவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு தானியக்க எந்திரங்கள் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. பெரிய நூலகங்களில் நூற் பட்டியல் தயாரித்தல், நூல் வழங்கல், அலுவல் இயக்கம் முதலிய பணிகளுக்கு எந்திரங்களைப் பயன்படுத்த முயன்று