உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 I 2 நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள் வியல் உலோகவியல், பொறியியல் போன்ற விஞ்ஞானத் துறைகளில் தனிப் பயிற்சி பெற்றுள்ள சிறப்பு நூலகர்கள் தங்களுடைய ஆராய்ச்சிகளுக்குப் பல நவீன விஞ்ஞான முறைகளையும், மின்காந்த சாதனங்களையும் சிறந்த முறை யில் பெரும் அளவில் பயன்படுத்திக் கொள்கிருர்கள். தனது வாடிக்கைக்காரர்களுக்கு மிக உதவியாக இருக்குமெனக் கருதினல், யாருடைய கூட்டுறவையும், உதவியையும் அவர் பெற்றுக் கொள்கிருர் தேவையின் தன்மை, விளைவுகளின் மதிப்பு இவற்றை மனதிற்கொண்டு, அந்த உதவிகளைப் பெறுவதற்கு நியாயமான அளவு செலவிடுவதற்கும் அவர் தயாராக இருக்கிரு.ர். - விஞ்ஞான-தொழில் நுட்பத் துறையில் பணியாற்றும் சிறப்பு நூலகர், எந்திர சாதனங்களைத் தனது வேலைக்கு முழு அளவில் பயன்படுத்திக் கொள்கிருர். பெரும்பாலான வினுக்களுக்குத் தனது நாலகத்திலிருந்தே விடைகளைப் பெறுவதற்கு அவர் முயல்கிரு.ர். அவர் தேடும் தகவல் ஏதாவது ஒரு மூலையில், முக்கியமில்லாத ஒரு அறிக்கையில், ஒரு விஞ்ஞான இதழில், சிறிய துண்டு வெளியீட்டில் ஒரு தொழில் நுட்பக் கழகத்தின் வெளியீட்டில் அல்லது அர சாங்க இதழில் இடம் பெற்றிருக்கக்கூடும். அதனைத் துருவிக் கண்டுபிடிப்பது சிறப்பு நூலகரின் முக்கியக் கடமை யாகிறது. விஞ்ஞான இயல்கள் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருப்பதால் அவற்றை அவ்வப்போது அறிந்து அதன்படி செயலாற்ற வேண்டியது அவசியமாகிறது. இங்கு காலம்தான் முக்கியம். எனவே, இச்சமயங்களில் அச்சிடப்படாத, அச்சிட்ட ஆளுல் கட்டடம் செய்யப் படாத நூல்கள் பேருதவியாக இருக்கும். ஒரு துறையில் புதிதாக ஏற்பட்டுள்ள வளர்ச்சிகள் பற்றித் தமது நிறு வனத்தினருக்கு உடனுக்குடன் தெரிவிப்பதற்காக அவர் அவ்வப்பொழுது வெளியாகும் முக்கியமான கட்டுரைகளின் படிகளை எடுத்து, அந்தக் குறிப்பிட்டதுறையில் அக்கறை கொண்டவர்களுக்கு அனுப்பிக்கெ ாண்டே இருக்கிருர் -