பக்கம்:நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள் தாதாரர்களுக்கு மட்டும் பணிபுரியும் வரலாற்றுச் சிறப்பு நூலகங்களாக இயங்கி வருகின்றன. இவ்வகையில், நியு யார்க் கழக நூலகம் கடந்த 200 ஆண்டுகளுக்கு மேலாகப் பொதுமக்களுக்குத் தொண்டாற்றி வருகிறது. உலகின் மிகப்பெரிய நூலகம் காங்கிரஸ் நூலகம் ஆகும். இது ஆறு ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இரண்டுபெரிய கட்டிடங்களில் இயங்கி வருகிறது. இங்கு நூல்களும் மற்ற இனங்களும் 4 கோடி அளவுக்குச் சேகரித்து வைக்கப்பட் டுள்ளன. இவற்றில் சுமார் மூன்றில் ஒரு பகுதி நூல்களும், துண்டு வெளியீடுகளும் ஆகும். இங்குள்ள நூல் அலமாரிகளை வரிசையாக அடுக்கி வைத்தால் 270 மைல் நீளத்திற்குச் செல்லும். இந்நூலகம் ஒரு தேசிய நிறுவனம். இது, காங்கி ரசுக்கு மட்டுமின்றி, அரசாங்கத்தின் எல்லாத் துறைகளுக் கும், நிறுவனங்களுக்கும், நாடெங்கிலுமுள்ள நூலகங்களுக் கும் தனிப்பட்டவர்களுக்கும் சிறந்த முறையில் பயன்பட்டு வருகிறது. இதைப் பற்றிய மற்ற விவரங்களை தனித்தலைப் பின் கீழ் காணலாம். அரசாங்கத்தின் எல்லாத்துறைகளும் தனித் தனியாக நூலகத்தை அமைத்துக் கொண்டிருக்கின்றன. சில துறை களுக்குப் பல நூலகங்களும் உள்ளன. மத்திய அரசாங்க நிறுவனங்களேச் சேர்ந்த மூவாயிரத்திற்கும் அதிகமான நூலகங்களில் பாதிக்கும் மேற்பட்டவை வாசிங்டனில் அல்லது வாசிங்டன் அருகில் அமைந்துள்ளன. மற்றவை நாடெங்கும் பரவலாக இயங்குகின்றன. இவற்றுள் 10 சதவிகித நூலகங்கள் வெளிநாடுகளில் இயங்கி வருகின் |றன. (சென்னையிலுள்ள அமெரிக்க நூலகம் இவற்றில் ஒன்று). மத்திய அரசாங்க நூலகங்கள் வகையிலும் உரு விலும் பிரம்மாண்டமானவைகளாக உள்ளன. வேளாண் மைத்துறை நூலகத்தை இதற்கு எடுத்துக் காட்டாகக் கொள்ளலாம். இங்கு 10 இலட்சம் நூல்கள் இருக்கின்றன. இராணுவ நூலகமும் மிகப்பெரியது. அங்கு 2.00 000 நூல்கள் உள்ளன. இவை தவிர, 2000 பருவ வெளியீடுகள்